பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

காப்பவள் அவள் அதனல் அவள் அவன்பால் சென்று, தன் நிைைய எடுத்துக் கூறி விரைவில் வந்து விரைந்துகொள்ளு மாறு வேண்டிக் கொள்வது இயலாது.

வேற்று வரைவு வந்துள்ளது என்பதை அவன் அறிந் தால், விரைந்தோடி வருவான். ஆளுல் அது அவனுக்குத் தெரியாது; அதனால் விரைந்துவந்து வரைந்து கொள்ளும் எண்ணம் அவனுக்கும் இல்லை. இருவர் உள்ளமும் ஒன்று பட்டு விட்டன; இனி எம்மைப் பிரிப்பவர் எவரும் இல்லை” என்ற துணிவால், வரைவு முயற்சியில் விரைவு ktru... டிலன். . . -

இந்தியிைல், அப்பெண்ணின் துயர் போக்கித் துனே புரிவது தோழி ஒருத்தியிஞலேயே ஆகும்; வேற்று வரைவு வந்திருப்பதை அவனுக்கு அறிவித்து, அவனே மண முயற்சியை விரைந்து மேற்கொள்ளச் செய்வதோ, தாய்க்கு மகள் காதலை உணர்த்தி, வேற்று வரைவினை மாற்றுவதோ அத் தோழி ஒருத்தியால் மட்டுமே இயலும் ஆளுல், அவள் அதைச் செய்திலள். அவள் அதைச் செய்து என் துயர் துடைத்துத் துணைபுரிய மாட்டாளா” எனத் துடித்தது அவள் பெண் உள்ளம்; ஆளுல், தோழி! துணைபுரிக’ என வேண்டிக் கொள்ள நாணிற்று அவள் நல் உள்ளம். மேலும், வெளியார் மணம் பேசவந்து விட்டனரே எனத் தோழி அஞ்சியபொழுது, அவளுக்குத் தான் காட்டிய போலி உறுதி, இப்போது தன் துயர்கூறி அவள் துணை வேண்டல இடை நின்று தடுத்தது. அதனல் செய்வதறியாது வருந்தினுள். செய்வது யாது எனச் சித்தித்தாள். வாளாக் கிடத்தல் கூடாது; வாய் திறந்து அவளை வேண்டிக்கொள்ளுதல்

தொல் -பொருள் பொருளியல் : 9