பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டு பொருள் தேடிப் போதலும் பொருந்தும்: ஆளுல், என் மனைவி அத்தகைய குறைபாடுடையவளல்லள்: அவளும், அவள் அழகும் அன்பும், அவள் தரும் இன்பமும் மறத்தற்கரிய மாண்புடையவாகும். இவளை இமைப் பொழுது மறப்பதும் அரிதாம் என்றால், அத்தகையாளே விடுத்துப் பிரிந்துபோய், இளமை கழிய முதுமையடையும் வரை மறந்து வாழ்வது இயலாதே. அச்செயல் மனத்தாலும் நினைக்கவொண்ணுக் கொடுமையுடையதன்றாே.

‘இவனைப் பிரிந்து போவதால் நான் வருந்துவது ஒரு புறம் கிடக்க, என்னைப் போகவிடுத்து இவள் படும் துயருக்கு எல்லே இராதே. காதல் துன்பம் அவளைப் பற்றி வருத்துமே. பிரிவுத் துயரால் புலம்பும் அவள், தன் அருகில் இருந்து ஆறுதல் உரைக்க நான் இல்லாக் கொடுமையை எண்ணி எண்ணி வாய்விட்டுப் புலம்புவளே. அக்கொடுமையை நான் எவ்வாறு தாங்கிக் கொள்வேன்? அவளை ஈண்டு விடுத் துச் சேணெடும் தூரம் சென்றுவிடுவதால் அவள் கொடுமை என் கண்ணிற்குப் புலனுகாது போய்விடாதே! செல்லும் வழியில், தன் காதற் சேவல், தள்னேத் தனியே விடுத்துப் போனமை யால், துயர் உற்றிருக்கும் நிலையில் புல்லூறு ஒன்று. தன்னைப் பற்றிக் கொன்று தின்னும் கருத்தோடு தன்னை நோக்கி விரைந்து பறந்துவரக் கண்ட வக்காப்பேடு, குழல் ஒலி போலும் தன் குரல் எடுத்துத், தன் காதற் சேவலைக் கூவிக் கூவி அழைக்கும் அக்கொடுங்காட்சி, வீட்டில் விடுத்துச் செல்லத் தனித்துக் கிடந்து துயர்வுறும் காதலி, பிரிவுத் துய ரால், தன்துயர் நிலைகண்டு அலர் கூறுவார்தம் கொடுஞ் சொற்களால் வருந்தி, என்னே நினைந்து புலம்பும் பொல்லாக் காட்சியை என் கண்முன் கொணர்ந்து காட்டி என்னேக் கலக்குமே; அக்கலக்கம் ஒழிந்து மீண்டும் கடமையை நினேந்து மேற்செல்வது இயலாதே. எடுத்துச் சென்ற வினையை இடையே கைவிட்டு வறிதே மீள நேரிடுமே; அது என் ஆண் மைக்கு அழகாகாதே; அதைக் காட்டிலும் போகாதிருப்பதே பெரிதும் நலமாம். கடமையுணர்வு மிகுதியால், காதலியின்