பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

கலக்கம் கண்டு கலங்கும் நிலையை ஒருவாறு கைவிட்டு வினை மேற் செல்லத் தொடங்கின், மறத்தற்கரியளாய அவள் நலம் மீண்டும் மீண்டும் வந்து என்னை மருட்டுமே; அது மருட்டுந் தொறும் மருண்டு மயங்கி மனத்துயர் மிகுந்து, மீண்டும் கடமையுணர்வு உணர்த்த உள்ளம் உரம்பெற்று மேற் செல்லத் தொடங்கிச் செல்வதால், மீளச், சேனெடுங்காலம் செல்லுமே; அதுவரை என் இளமை, வாழாதே; இளமை கழிந்து போக, நான் முதுமை பெற்றுவிடுவனே முதுமை யுற்ற என்னல், இன்பம் நுகர இயலாதே; என் இளமை, இன்ப நுகர்ச்சி பெருமலே இறந்து ஒழிய வேண்டியது தானே’ எனப் பலப்பல எண்ணித் துயர் உற்றான்.

‘வங்காக் கடந்த செங்கால் பேடை

எழால் உற வீழ்ந்தெனக் கணவற் காளுது குழல்இசைக் குரல் குறும்பல அகவும் குன்றுகெழு சிறுநெறி அரிய என்னது மறப்பரும் காதலி ஒலிய இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே.” a

அந்தோ அருளே உனக்கு ஆரும் இல்லையோ?

பொருள் தேடிப் போய்விட்டால் காதலி கலங்குவள்: பிரிவுத் துயர்பொருது அவள் உயிரிழந்து போதலும் கூடும்: மனேயற மாண்பினைக் கருதி ஒரு கால் அவள் ஆற்றியிருப்பி லும், பொருள் ஈட்டி வருங்காறும் என் இளமை நில்லாது; இளமை கழிந்த பின்னர் வாழ்க்கையில் இன்பம் காணல் இயலாது; என் வாழ் நாள் இன்பம் காணுதே அழியவேண்டி யது தானே’ என்ற எண்ணங்கள் அலைக்கழித்தமையால் பொருள் தேடிப் போகத் துணிந்தவன் சிறிதே தயங்கினன்.

a குறுந்தொகை 1 151. துரங்கலோரியார். வங்கா - ஒரு பறவை; கடந்த - தனித்திருந்த எழால் - புல்லூறு எனும் பெரும்பறவை; குறும்பல - பலமுறை;கெழுநிறைந்த இறப்புல்-பிரிந்து செல்வேன், -