பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

lo

தலும், இன்பம் அளித்தலும், அது தீய நெறியில் ஈட்டப் படாது, நன்னெறியில் ஈட்டப்பட்ட விடத்து மட்டுமேயாம். திதின்றி வந்தபொருளே அறம் ஈனும்;இன்பம் ஈனும்; அன்பை மறந்து, அருள் நெறியைக் கைவிட்டுப், பொருள் ஈட்டுவது ஒன்றே குறிக்கோளாய் நின்று ஈட்டிய பொருள், தன்னே ஈட் டியவனுக்குப் புகழாகிய பெரும்பயன் நல்காது; மாருகப்பழி யாம் பெருங்கேட்டையே நல்கும்; அதனல் அறிவுடையோர், அன்பு மறந்து போக, அருள் அழிந்துபோக வரும் பொருளைப் பொருள் என மதியார்; அப்பொருளை, அவர்கள் தம் கைக ளால் திண்டுவதும் செய்யார்; அத்தகைய உண்மையுணர்வு உற்ற உள்ளம் வாய்க்கப் பெற்றவரே உரவோர் என உயர்ந் தோரால் புகழ்ந்து பாராட்டப்பெறுவர்; அத்தகைய உயர்வு தன் கணவனுக்கு இல்லாகிப் போவது காணக் கலங்கிளுள்.

புகழ் தரும் பொருளீட்டிவரத் துணிந்த கணவன், கலங் குவார் . யாரே யாயினும், அவர் கலக்கத்திற்காம் காரணம் யாதே யாயினும், அவர் கலக்கத்தைப் போக்குவது உயர்ந் தோர் கடமையாம் என்ற அருள் உள்ளத்தையும் இழந்து விட்டான்; பிறர் கலக்கத்தைப் போக்காமை மட்டும் அன்று அவர் கலக்கத்திற்குத் தானே காரணமாம் என்பதை அறிந் தும் தன் பிழையினைப் போக்கிக் கொண்டிலன்; ஆம் மட்டோ தன்னல் அன்பு செய்யப்பட வேண்டியவள், தன் பால் பேரன்பு கொண்டவள், தான் காட்டும் பேரன்பு ஒன் றையே நம்பி உயிர் வாழ்பவள் தன் காதலி என்பதை மறந்து, அவ்வன்பை மறுத்துப் போகத் துணிந்து விட்டான்; அம்மட்டோ: வாழ்க்கைத் துணையாய் வந்தவள் மனைவி; தனக்குத் துணையாய் அவளும், அவளுக்குத் துணையாய்த் கானும் விளங்க வேண்டிய நிலைமையுண்மையால் துணைவர் ான அழைக்கப்பட்டவர் தாம் என்பதை அறவே மறந்து திட்டான்; தனக்குத் துணையாய் நின்று காக்கும் கடமையை கைவிட்டுப் போகத் துணிந்து விட்டான்; அதனல், சென்று சர்த்து வரும் செல்வம், அன்பை அழித்து, அருளை ஒழித்து, அற நெறியைக் கைவிட்டுவரும் குற்றம் உடையதாதலே