பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

அவள் மேனியின் அம்மாமைக் கவினைக் கண்டே அவள்மீது காதல் கொண்டான்; அவளேக் காதலித்த பின்னர், அவளோடு பழகியபோது, அவள் அகநலம், அவள் மேனி காட்டும் புறநலத்தினும் சிறந்தது என்பதை அறிந்து, அவள் மீது பேரன்பு காட்டினன். என்றாலும், அவளைக் காதலிக்க அவள்மீது ஆசை கொள்ளத் துணைபுரிந்தது-தூண்டியது அம் மாமைக்கவினே ஆகும். இவ்வாறு அவனை மணந்து மாண் புறப் பெருந்துணை புரிந்தது அவ்வழகே யாதல் அறிந்து, அதனிடத்தில் அவள் பேரன்பு காட்டினுள்; அதைப் பேணிக் காப்பதில் பேரார்வம் காட்டினுள்; அவ்வழகு பெற்றுள்ள மையால் பெருமிதம் கொண்டது அவள் உள்ளம். ஆம் மட்டோ கணவன் கண்களுக்கு அவன் அவளைக் காணும் பொழுதெல்லாம், விருந்தளித்து அவன் உள்ளத்தில் இன்பம் ஊற்றெடுத்துப் பாயச் செய்தது அவள் அழகு. அவளை விட்டு இமைப் பொழுதும் பிரியவிடாது அவனைக் கட்டிப் போட்டுக் களியாட்டம் ஆட்டியது அவள் அழகு.

இவ்வாறு தனக்கும் தன் கணவனுக்கும் ஒருசேர இன்பம் ஊட்டி உற்றதுணையாய் விளங்கிய அப்பேரழகு இப்போது அழியத் தொடங்கிவிட்டது; கணவன் பிரிவால் அவள் கருத் தில் எழுந்த கலக்கம், மெல்ல மெல்ல, அவள் மேனியையும் பற்றிக்கொண்டது. அம்மேனியின் மாந்தளிர் போலும் மாமை நிறம் மெல்ல மெல்ல மங்கிவிடத் தூய கண்ணுடிமீது வாய்வைத்து ஊதிய வழி ஆவிபடர்ந்து அழகிழந்து காட்டும் அவ்வாடியின் தோற்றம்போல், அவள் உடல் ஒளி இழந்து தோன்றிற்று. பசலைபடர்ந்து அவ்வழகை அழித்துவிட்டது. செம்மை கலந்த பொன்னிறம் போன்று சிறப்பளித்த அவள் மேனி, வெண்பசும் பொன்போல் வெளுத்துவிட்டது. அன்று தனக்கும் பெருமை அளித்து, தன் காதலனுக்கும் இன்பம் ஊட்டிய அது, இன்று இருவரிக்கும் உதவாது பசலையால் பாழுற்றதைக் கண்டு கலங்கினள். தான் ஈன்ற கன்றிற்கும் வயிருர அளித்து, தன்னைப் பேணிக் காப்பவர்களின் கறவைக் கலம் நிறைந்து வழியுமாறு சுரந்தும் பயன்பட வேண்டிய ஓர்