பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iz

ஆவின் இனிய சுவை மிக்க பால் அந்நிலைக்கு மாருக, தன் கன்றாலும் உன்னப் பெருமல். தன்னே உடையாரின் கறவை கலத்தை நிறைப்பதும் செய்யாமல், வறிதே மன்னில் சிந்திச் சீரழிவதுபோல் ஆகிவிட்டதே என் மாமைக்கவின் என எண்ணிக் கலங்கினுள்;

  • கன்றும் உண்ணுது, கலத்தினும் படாது நல் ஆன் தீம்பால் கிலத்து உக்காங்கு, எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது பசலை உணி இயர் வேண்டும் தில்லை அதகுல் என் மாமைக் கவினே. a

தின் துயர் கேட்பின் நீடலர் :

அப்பெண் படும் துயரைத் தோழி பார்த்தாள்; அவள் வாழ்வில் எவ்விதக் குறைவும் இல்லே. இன்ப வாழ்விற்கு வேண்டும் அத்தனையும் ஆங்கு உள. மெல்லிய நூல்கொண்டு தொடுத்த மலர்ச் சரங்கள் அவள் மஞ்சத்திற் கிடந்து அழகு செய்கின்றன; மர்ைப் படுக்கையில்தான் அவள் பள்ளி கொள் கிருள்; ஆயினும் அவளால் உறங்க முடியவில்லை; நெருப்பின் மீதும் நெருஞ்சி முள் மீதும் வீழ்த்தாற்போல் துயில் இன்றித் துடிக்கிருள்; அவள் அழகு அத்தனேயும் அழிந்துவிட்டது; அவளைப் பார்க்கவே இவளால் முடியவில்லை, அவகாத் தேற்ற அவள் எதை எதையோ கூறிப் பார்த்தாள்; அவள் கூறிய எதுவும் அவள் கவைைய-கண்ணிரைப் போக்கவில்லை.

ஆயினும் அவள் தன் முயற்சியைக் கைவிடவில்லை,

கணவன் பிரிந்து போயிருப்பது சிறந்த பணி குறித்து. கணவன் சிறந்தது மேற்கொண்டு செல்வதில் பெருமை கொள்ள வேண்டுவது மனேவியின் கடமை; அக்கடமையுணர்

குறுந்தொகை 27. கொல்லன் அழிசி. உக்காங்கு-சிந்திiணுனது போல். என் ஐ.என் தலைவன்; உணி இயர்-உண்ண வேண்டும்-விரும்பும். -