பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

இருவரும் பள்ளிபுக்கனர்; இருவர் வேட்கையும் ஒருவாறு தீர்ந்தது. வேட்கை தீர்ந்த அவள் உள்ளத்தில், அறிவு மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறிக்கொண்டது. அதஞல் அவன் செய்த குற்றம் அவள் நினேவிற்கு வந்தது. குற்றம் புரிந் தாரைக் கொடுமை செய்யாது விடுதல் கொடுங்கோலாட் சிக்குக் கால்கோள் விழா எடுத்தல் போன்றதாம் என்றது அறிவு. அதனல் ஒழுக்க வரம்புமீறிய அவன் கொடுஞ் செயலையும், அதனால்தான் உற்ற துயரையும் அவனுக்கு எடுத்துக்காட்டி, அத்தகைய கேடு இனியும் நேராவாறு நின்று காப்பாயாக என்பதை அவனுக்கு அறிவுறுத்தல் வேண்டும் என விரும்பிளுள், விரும்பியவள், தான் செய்த குற்றத்தை எண்ணி இயல்பாகவே வருந்தியிருக்கும் அவன் உள்ளம், அக்குற்றத்தைப் பிறர் எடுத்துக்காட்டி இடித் துரைத்த வழி மேலும் துயர் உறும் என அறிந்து, அறிவுறுக்க விரும்பிய அறிவுரையை, அவள் உள்ளம் நோகாவாறு, பணிந்த மொழிகளால் இனிமையுறக் கூற விரும்பினுள்.

• உலகில், உயர்ந்த பண்புகளில்-மக்கட் பிறவிக்கு உரிய என விதித்த ஒழுக்க நெறிகளில்-வழுவாது நிற்கும் ஒரு சிலா வாழ்வதினுலேயே உலகியல் நடைபெறுகிறது. அவ்வொரு ‘சிலரும் அவ்வொழுக்க வரம்பை மீறி வழுக்கிவிடுவராயின், உலகியல், அழிந்துவிடும். அதைப்போல் உன் அன்புத்தளை என்ன வளைத்துக் கிடப்பதினலேயே நான் வாழ்கிறேன். அத்தனை சிறிது அறுந்துவிடினும் நான் வாழ்விழந்து போய் விடுவேன்’ எனக் கூற விரும்பினுள். ஆனல் சொல்லும் முறை கற்ற அவள் நல் உள்ளம் அதை அவ்வாறே கூருது, நீலமணியின் நிறத்தைத் தோற்கடிக்குமாறு கறுத்துத் தோன்றும் கடல் நீரையும், கடற்கரையில் மலர்ந்து மணக் கும் கழிமுள்ளிச் செடியையும் கொண்ட ஆவன் நாட்டு வளத்தை நாவாரப் பாராட்டி அப்பாராட்டின் வழியே, பஅன்பு கடல் நீர் தன் எல்லைக்குள் நிலை பெயராது நிற்பதி ஞலேயே அது ஆழம் மிக்கு அழகிய நீல நிறம் பெற்றுப் பாராட்டப்பெறுகிறது. அதேைலயே அதன் கரையில்