பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g?

ஆனல் அவ்வன்பு கைகூடவில்லை; அதனல் என் தோள் தளர்ந்தது; ஆகவே, என்றுதல் பசப்பிற்கும், தோள் தளர்ச் சிக்கும் நான் கொண்ட ஆசையே காரணமாவதல்லது அவர் காரணமாகார்; என் தளர்ச்சி அவரால் வந்ததன்று; அவர் அதைச் செய்யார்; அவர் அத்துணைக் கொடியரல்லர்: ஆகவே, மன்றத்தில் நிற்கும் மரத்துறையும் தெய்வமே என் மனம் விரும்பும் அவரைக் கொடுமை செய்யற்க, இது, என் உள்ளம் உருக நான் விடுக்கும் வேண்டுகோள்’ எனக் கூறி ள்ை; அவள் காதலின் தூய்மைதான் என்னே?

“ மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்

கொடியோர்த் தெறு உம் என்ப; யாவதும் கொடியர் அல்லர் எம் குன்றுகெழு காடர்: பசைஇப் பசந்தன்று நுதல்; நெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே’s

காட்டாற்றங்காைக்கு வருக:

அவளும் அவனும்கொண்ட தொடர்பினைத் தோழி ஒருத்தியே அறிவாள், அதைப் பிறர் அறியின் கேடாய் முடி யும்; அதனுல் அவளும் அவனும், ஒருவரையொருவர் கண்டு மகிழ்தலைப் பிறர் எவரும் அறியாவாறு மறைத்தே மேற் கொள்ள வேண்டியதாயிற்று, அதில் பெரிதும் விழிப்பாய் இருந்தாள் தோழி; அதனல், அவர்கள் ஒருநாள் சந்தித்த இடத்திலேயே மறுநாளும் சந்திப்பதை அவள் விரும்பாள்:

ம. குறுந்தொகை 87. கபிலர்

மன்றம்-ஊர் நடுவே உள்ள பொதுவிடிம்; மராஅத்த. செங் கடம்பு மரத்தில் வாழும்; பேளம் முதிர்.பிறரிக்குக் கொடுமை செய்வதில் மிக்க; தெறுTஉம்.துன்புறுத்தும்; யாவ தும்.சிறிதும்; குன்று கெழு-குன்றுகள் நிறைந்த, பசைஇ. அவரை விரும்பியதால், பசந்தன்று-ஒளி இழந்தது; ஞெகிழஎன் உள்ளம் உருகியதால், ஞெகிழ்ந்தன்று-தளர்ந்தது. தடபருத்த, - - -