பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



“ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்

சேய்த்தும் அன்றே, சிறு கான்யாறே; இரைதேர் வென்குருகு அல்லது யாவதும் துன்னல் போகின்றால் பொழிலே, யாம் எம் கூழைக்கும் எருமண் கொணர்கம் சேறும்: ஆண்டு வருகுவள் பெரும் பேதையே.” 2

தூதுரைக்க வல்லார் வருவரோ?

காணுற்றங்கரை, காவற்சோ,ை கடற்கரை, திணைப்புனம் போன்ற இடங்கள் தனக்கும் தோழிக்கும் மட்டும் தனி யுரிமை உடையனவாகா; ஊரார் அனைவர்க்கும் உரிய பொதுவிடங்கள் அவை. அதனல், ஆங்கெல்லாம், ஒருவர் மாறி ஒருவர் ஓயாது வந்து கொண்டேயிருப்பராதவின், காதலனேடு களித்துத் திரிவதற்கு அவ்விடங்கள் ஏற்றன வாகா என்பதை அறிந்துகொண்டாள் அப்பெண். ஆனால், வாய்ப்புடைய இடங்கள் வாய்க்கவில்லையே என்றதால், காதலனை வாராதே என்று கூறவோ, அவனேக் காணுதிருக் கவோ அவள் விரும்பவில்;ை அது அவளால் இயலாது. அதனால் காதலனே வரவேற்று, அவளுேடு இடையீடின்றி நெடும் பொழுது இருந்து இன்புறற்கேற்ற இடமும் காலமும் வாய்க்காவோ என வரங் கிடந்தாள் அப்பெண். பிறர் கன்னில் படாது, காதலனேடு களித்திருக்க வேண்டுமாயின், அதற்குத் தன் மனேயொன்றே ஏற்புடிைய இடிமாம்; ஆனால், ஆங்குத் தாயும் தந்தையும் தன்னை ஒர் இமைப்பொழுதும் தனித்திருக்க விடுவதில்லை; மேலும், மீனினத்தின் மன்னன் என மதிக்கப்பெறும் கொடிய சுரு:மீன் வேட்டையில் விருப்புடையனகிய தந்தை, அத்த

டி குறுந்தொகை: 113. மாதிரத்தனர்.

அணித்து. அண்மையில் உளது; சேய்த்தும் அன்று-தொை வில் இல்லை; கான்யாறு-காட்டாறு; வெண்குருகு-நாரை: யாவதும்-வேறு எந்த உயிரும்; துன்னல்-நெருங்குதல்; போகின்று.இல்லையாம்; கூழைக்கு.கூந்தலுக்கு எருமண்களிமண், கொணர்கம்-கொண்டுவருதற் பொருட்டு.