பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



தின் மணம் கம்மென விசிற்று; புது மணம் திடுமென வீசக் காரணம் யாது என ஆராயுமாறு, தாயை அது எழுப்பி விடுமோ என அஞ்சிள்ை; வத்து நிற்பான்பால் சென்று. “அன்னை உறக்கம் கொண்டிலன்; ஆகவே, அவள் உறங்கும் வரை சிறிது காத்திருப்பாயாக’ என்றாே, இன்று போய் நாளை வருக’ என்றாே கூறமாட்டாது வருந்திளுள்; நான் அவன்பால் சென்ற சமயத்தில், தாய் என்னை விளிக்க, நான் குரல் கொடுக்காமையால், என் பாயலேநோக்க, நான் ஆங்கு இல்லாமை அறிந்து, என்னைத் தேடிக்கொண்டு, நானும் என் காதலரும் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டால் என் நிை என்னும்” என எண்ணினுள்; தன் களவு வெளிப்பட்டு விடுமே என அஞ்சிள்ை, அதஞல், மழையின்கொடுமை கண்டும் அஞ்சாது வந்துள்ளான் என்பதை அறிந்தும், அவள் அவன்பால் சென்றிலள்.

காதலியின் வரவினை எதிர்நோக்கி நின்ற இளைஞன், நெடிது நேரம் கழியவும் அவள் வாராளாகவே, வருந்தி வறிதே வீடு திரும்பினன்; தாய் அறிந்துகொள்வள் என அஞ்சி, அவனைக் காணச் செல்லாத அவள், அவன் சென்ற பின்னர், அந்தோ! நான் வாராமையால், அவன் எவ்வாறு வருந்தினனே? என்ன என்ன என்ணினனே? யாது செய்யத் துணிந்தனனே’ எனப் பலப்பல எண்ணி வருந்தினள்.

பொழுதும் எல்லின்று; பெயலும் ஒவாது கழுது கண்பனிப்பு வீசும்; அதன்தலைப் புலிப்பல் தாலிப் புதல்வன் புல்லி

அன்ன என்னும் அன்னையும், அள்ளுே! என் மலைந்தனன்கொல்தானே, தன்மலை ஆரம் காறும் மார்பினன் மாரி யானையின் வந்து கின்றனனே.” .

உ குறுந்தொகை 1161. நக்கீர.ே

எல் இன்று - ஒளி இழந்தது ஒவாது - ஒழியாது; கழுது பேய், பனிப்ப- இமைக்குமாறு அதன் த ை- அதற்குமேல்;