பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

தோழி! நம் ஊர்ப் பெண்கள் அனைவருமே அழகில் சிறந்தவர்; மலைச்சாரல் மலரும் தழையும் கொண்டு, ஆடை போல் தொடுத்து அணிந்து செல்லும் அழகை, நாளெல் லாம் கண்டு மகிழலாம்போல் தோன்றும். அம்மகளிர் அனை வரினும் சிறந்த அழகுடையவள் நான்; அவரெல்லாம் பார்த்துப் பொருமைப்படவல்ல பேரழகு, என் அழகு. ஆனல், தோழி! அவ்வழகு இன்று என்பால் இல்லை; அது என்னைவிட்டு, நம் காதலர்பால் சென்றுவிட்டது; அழகிழந்து அழிகிறேன் நான்; என் பேரழகு கண்டு என்னை அன்று பாராட்டிய இவ்வூரார், இன்று என் அழிநில்ை கண்டு பழி துாற்றுகின்றனர்; அத்துயர் பொறுக்கமாட்டாது என் உடல் தளர்ந்தது; வளைகள் கழன்று ஒடலாயின; ஆனால், நான் இந்நிலை உற்றும், என் உயிர் இன்னமும் வாழ்கிறது; அது தான் வியப்பிற்குறியது; தோழி! செயலற்றுப் போன என்னல் எதையும் செய்ய முடியவில்லை; காதலர், தாமே வந்து மணங் கொண்டாலல்லது, நம் வாழ்வில் மகிழ்ச்சி மலராது; ஆனால், அவரோ, நம் நிலையை அறிந்தவராகத் தோன்றவில்லை; பண்டு, பறந்தும், பாய்ந்தும் தான் விரும்பும் இரைகளைப் பெற்று மகிழ்ந்த நாரை, முதுமையுற்றுப் போனமையால், பறந்து இரைதேட மாட்டாது கடல் அருகே வளர்ந்த மரத் தில், கடல் நீரில் படியுமாறு தாழ்ந்த கிளையில் இருந்து, கரையை நோக்கி வீசும் அல்ை, தனக்கு வேண்டும் இரைகளைக் கொண்டு வராதா என எதிர்நோக்கி ஏங்கிக் கிடக்கும் நம் நாட்டுக் கடற்கரைக் காட்சிகளைக் காணும் அவர் உள்ளத் தில், செயலற்றுக் கிடப்பாரின் துன்ப நிலை புலப்பட்டிலதே! நான் என்ன செய்வேன்? அெைகாண்டு அளித்தாலல்லது, தானே இரைதேடித் தின்னமாட்டாது, ஏங்கிக் கிடக்கும் அவர் நாட்டு நாரைபோல், நானும் அவரையே எதிர் பார்த்து வாழ்கிறேன்; தோழி! என் துயரி நிலையை அவர் என்று அறிவாரோ?” -

இலங்குவளை நெகிழச் சாய், யானே

உளெனே! வாழி தோழி சாரல்