பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

##

தழைஅணி அல் குல் மகளிருள்ளும் விழவு மேம்பட்ட என்கலனே, பழவிறல், பறைவலம் தப்பிய பைதல் நாரை, திரைதோய் வாங்குசினை இருக்கும் தண்ணம் துறைவனெடு கண்மா றின்றே. a நான் உாையேன்; அவனே அறிக!

அவள் அவ்வாறு வருந்தக் கண்ட தோழி, அவளை நோக்கி, பெண்ணே! வருந்தி வாய்மூடிக் கிடப்பதால் பய னில்லை; காதலரைக் கண்டு, உன்துயர் நிலையைக் காட்டி, உன்னை மணந்துகொள்ள வேண்டிய அவர் கடமையை அவ ருக்கு விளங்கக் கூறுதல் உன் கடனும்; அவ்வாறு கூருது, “அவரே வருக என எதிர்நோக்கி வாளாக்கிடப்பின், நம்: பெற்றாேர், உன்னைப் பிறன் ஒருவனுக்கு மணம் செய்துவிடு வர்; உன் மணம் குறித்து, அவர்கள் பேசவும் தட்ைபட்டு விட்டனர்; ஆகவே, காதலரைக் கண்டு கூறுவாயாக என்றாள்.

அது கேட்ட அப்பெண், தோழி! மயிைல் வளரும் மூங்கில் போன்ற அழகுடையவாய் அன்று விளங்கி, இன்று, அவ்வழகிழந்து தளர்ந்துபோன என் தோள்களை அணைத்து, நம்மோடு நட்புக்கொண்டு, என் உள்ளத்தைக் களவாடிய அன்று, இனி என்றும் உன்னைப் பிரியேன்” எனச் சூள் உரைத்தவர் அவர்; ஆகவே, அச்சூளுரையைப். பொய்யாகா வாறு காக்கும் கடமை, அன்று சூள் உரைத்த அவருக்கே உண்டு; மேலும், அவர் பால் காதல்கொண்டு, அதனுல் நலன் இழந்துபோன நமக்கு இனி, பற்றுக்கோடு அவனே, தம்மைப்

குறுந்தொகை 1 125. அம்மூவர்ை. - . இலங்கு-விளங்குகின்ற; நெகிழ.கழல, சா இய்-மெலிந்து; விழவு மேம்பட்டதிருவிழாப்போல் சிறந்த அழகுடைய பழவிறல் பண்டு ஆற்றல் வாய்ந்த பறைவலம்.பறக் கும் ஆற்றல்; தப்பிய-இழந்த பைதல்-துயர்மிக்க; திரை தோய்-அலைகள் படுமாறு; வாங்குசின்-வளைந்த கிளை; கண் மாறின்று-இடம் பெயர்ந்தது. . -