பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

யிற்று; அதனல், வருக என வரவேற்கவும் அஞ்சுகிறேன்; அன்ப! இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுப் பேணி வளர்க் கும் ஒரு தாய், அவ்விரு குழந்தைகளும், ஒரே காலத்தில் நஞ் கண்டவிடத்து, இந்தக் குழந்தையைக் கவனிப்பதா? அந்தக் குழந்தையைக் கவனிப்பதா? நஞ்சு தீர்க்கும் மருந்தை இந்த குழந்தைக்கு முதலில்அளிப்பதா? அந்தக்குழந்தைக்குமுதலில் அளிப்பதா? அறியாது துடிப்பது போலாகிவிட்டது.என் நிலை. அன்ப! அவளைக் காணமாட்டாமையால் உனக்குமட்டுமே வருத்தம் உண்டு என எண்ணற்க; உன்னைக் காணுது வருந் தும் வருத்தம் அவளுக்கும் உண்டு; உன்னைக் காணுது நெடு நாள் வாழ்தல் அவளாலும் இயலாது; உன் வருகையை அவள் விரும்பாமைக்குக காரணம், உன்பால், அவளுக்கு அன்பில்லாமையால் அன்று; நீ வரும் வழியின் கொடுமை அறிந்து அஞ்சுவதினலேயே, அவள் உன் வருகையை விரும்ப வில்லை. வாராதிருந்தால், காதலியைக் காண இயலாது போகுமே; அவளைக் காணுது எங்ஙனம் வாழ்வேன்’ எனக் கலங்கும் உன் கலக்கமும், ஏதம் மிக்க வழியில் இரவில் வரும் அவர்க்கு. இடையூறு நேர்ந்தால், நான் எங்ஙனம் வாழ்வேன்’ என எண்ணி வருந்தும் அவள் வருத்தமும், நீ இரவில் வருதலே விடுத்து, அவளே விரைந்து வந்து வரைந்து கொள்வையாயின், ஒருங்கே அழியும்; இருவர் நிலை கண்டு கலங்கும் என் கலக்கமும் அழியும், நீவிர் இருவீரும் ஒன்றிய அன்பினராய் ஒருங்கிருந்து வாழ்வீர்; ஆகவே அன்ப! வரை விற்காம் முயற்சிகளை விரைந்து மேற்கொள்வாயாக’ என

வேண்டிக்கொண்டாள். . ... -

கொடுங்கால் முதலைக் கோள்வல் ஏற்றை வழி வழக்கு அறுக்கும் காணலாம் பெருந்துறை இன மீன் இருங்கழி நீந்தி, நீ நின் கயன் உடைமையின் வருதி, இவள், தன் மடன் உடைமையின் உயங்கும், யான் அது