பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

கவைமிக நஞ்சு உண்டாஅங்கு அஞ்சுவல் பெரும! என் நெஞ்சத்தானே.”

உயிர் சிறிது; காதல் பெரிது :

காதலியைக் காணவும் முடியவில்ேைய என்று நீ வருந் துகிறாய், காதலர் கொடுமைகள் நிறைந்த வழியை இரவில் கடந்து வருங்கால் அவருக்குக் கேடு நேரின் என் நிலை என்ன வது என அவள் வருந்துகிருள்; உங்கள் இருவர் நிலைகண்டு நான் வருந்துகிறேன்’ எனக் கூறக் கேட்டும் இளைஞன் உள் ளம்; திருமணத்தில் கருத்தைச் செலுத்தாமையினக் கண் டாள் தோழி. அதனல், ‘அன்பt இனியும், இந்நிலை நீடித் தால், அவள் உயிர் வாழாள்; அவள் உயிர் வாழாளென்பது ஒருபுறம் கிடக்க, உங்கள் காத ைஅறியாத அவள் பெற்றாேர் அவளை வேறு யாருக்கேனும் மணம் செய்து தந்துவிடுவர்’ என உண்மை நிகைளேக் கூறி, அவன் உள்ளத்தை மாற்றத் துணிந்தாள். . . . .

உடனே இளைஞனே நோக்கி அன்ப வேர்ப்பலா வளர்க் கும் உங்கள் ஊரார், அம்மரங்களைச் சூழ வேலி அமைத்துப் பேனிக் காக்கின்றனர்; அதனல், அம்மரங்களை, எவரும் எளிதில் அணுகுதல் இயலாது; மேலும், அம்மரங்களெல்லாம் வேர்ப்பலா மரங்கள்; பழங்கள் வேரிலேயே பழுக்கும்; அதனல், நனி மிகப் பழுத்தாலும், காம்பற்றுக் கீழே விழுந்து பாழாவதில்லை; ஆகவே உங்கள் நாட்டில், பலாப்பழங்கள் கள்வர்களால் கவரப்படுவதோ, தாமே வீழ்ந்து பாழாவதோ இல்லை; ஆனல்; எங்கள் நாட்டு நிேையா வேறு; எங்கள் நாட்டில் வேர்ப்பலா இல்லை மேலும் தாம் வளர்க்கும் பலா

a குறுந்தொகை: 324. கவை மகளுர்,

கொடுங்கால்-வளைந்த கால்; கோள்வல்-பற்றிக்கொள் ளுதலில் வல்ல; ஏற்றை-ஆண்; வழக்கு அறுக்கும்-வழங்கு வதை அழிக்கும; நயன்-அன்பு மடன்-அறியாமை, உயங்கும்

வருந்துவாள் கவைமக-இரட்டைப்பிள்ளைகள்; நஞ்சு உண் டாங்கு-நஞ்சு உண்டவிடத்து வருந்தும் தாய்போல்: அஞ்சுவல்-வருத்துவேன், - .