பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

si

மரங்களைச் சூழ வேலியிட்டுக் காக்கும் அறிவும், அப்பலா வளர்ப்பார்க்கு இல்லை; அதனல், பலாப் பழுத்திருக்கக் காணும் எவரும் அப்பழத்தை எளிதில் கவர்ந்து சென்று விடுவர்; மேலும், பழங்கள் நனி மிகப் பருக்கும்; பழங்களின் பருமையைத் தாங்கமாட்டாது கிளைகள் தாழ்ந்து ஒடியும்; பழங்களை, அவை பழுக்கத் தொடங்கும்வரை தாங்கியிருப் பதே அரிதாம்; அப்பழங்கள், சாறு நிறைய மேலும் பழுக் கட்டும் என விட்டுவைத்தால், அக்கிளைகள் ஒடியப் பழங்கள் பாழாம்; அம்மட்டோ? பழங்கள் மிகப் பருத்துப் பக்குவமா கிய நிலைகண்ட எவரேனும் அதைப்பறித்துச் சென்றுவிடுவர்; அதனல், பழங்கள் பழுக்கும்வரை காவல் புரிந்து, பறிக்கும் பக்குவம் அடைந்தவுடனே பறித்துக்கொள்ள வேண்டிய கவலை, எங்கள் நாட்டுப் பலா வளர்ப்பார்க்குப் பெரிது; வேர்ப்பலா வளர்க்கும் நாட்டாராகிய உமக்கு, எங்கள் நாட்டுப் பலா வளர்ப்பாரின் கவலை தெரியாது; அதனல், அவர் கவலையைக் கருதாது, கண்டு எள்ளி நகைக்கின்றன’’ என, இருவர் நாட்டுப் பலா வகைகளின் இயல்புகளை எடுத் துக் கூறுவாள்போல் கூறி, அன்ப! காதலி உனக்கே உரிய வள்; பிறர் எவரும் அவளை மணந்து கொள்ளுதல் இயலாது; அவளும், அவள் காதல் நோய் எவ்வளவு பெருகினும், அதை எவ்வளவு காலம் வேண்டுமானலும் தாங்கிக்கொள்வாள் என்று எண்ணிக் கவலையற்றிருப்பது கூடாது; உன் காதலி காப்பற்றவள்; அவள் அழகும், குணமும் காணும் எவரும், அவளை மணந்துகொள்ள விரும்புவர்; அவள் உன்னேக் காத லிக்கிருள்; அதனல், அவள் உனக்கே உரியவள் என்பதை உணராத பெற்றாேரும், அவளை எவருக்கேனும் மணம் செய்து கொடுத்துவிடுவர்; அது ஒருபுறம் இருக்க, அவள் உயிர் மிக மிக மென்மை வாய்ந்தது; அவ்வுயிரைத் தாங்கிய உடல், அவள் உயிரினும் மெல்லிது; ஆனல், அவள் உன்பால் கொண் டிருக்கும் காதலே, அளவிடற்கரிய பெருமை வாய்ந்தது; அக் காதற் பயன் கிட்டாமையால், அவள் கொள்ளும் துன்பம், அவள் காதலினும் நனி மிகப் பெரிது; அந்நோயைத் தாங்கி, அவள் உயிர் இதுவரை அழியாது வாழ்ந்ததே அரியசெய