பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

இளைஞன், செல்வக் குடியில் பிறந்தவன் என்றாலும், ஊக்க் மும், உயர்ந்த நோக்கமும் வாய்ந்த அவன் உள்ளமும், தன் மணவினைக்கு வேண்டும் பொருளைத் தானே ஈட்டிக் கொணர் தல் வேண்டும் என விரும்பிற்று; அதனால், அப்பொருளீட்டி வரும் கருத்தோடு, வெளிநாடு செல்வதற்கு வேண்டும் முன் னேற்பாடுகளில், அவன் முனைந்திருந்தான்.

உள்ளது உயிர் ஒன்றே :

இளைஞன் எண்ணம் இது என்பதை அறிந்தாள் அப் பெண்; உயிரினும் நாண் சிறந்தது; நாணின் பெருமை யுணர்ந்த நல்லோர், அந்நானைக் காத்தற் பொருட்டு, உயிரையும் இழக்கத் துணிவர்; உயிரைக் காத்தல் கருதி, நானே இழக்க அவர் உள்ளம் ஒவ்வாது. ஆனல் நற்குல மகளிற்கு, நாணினும் கற்பே சிறந்தது. அவர்கள் நாணேத், தம்மைப் பெற்ற தாயினும், பெறுதற்கரிய உயிரினும் சிறந்த தாகக் கருதுவர் என்றாலும், அதைத் தம் கற்பினும் சிறந்த தாகக் கருதார்; அதனல், தம் கற்பைக் காத்தற் பொருட்டு, நாண் இழந்து வாழவும் துணிவர். அத்தகைய நற்குல மகளிர் வழிவந்தவளாதலின் அப்பெண், காதலன் வரையாது வந்து செல்வதால், ஊராரி அலர் கூறக் கேட்டு, அதனல், தன் நாண் அழிந்து போகவும், கற்பைக் காக்கும் கருத்தோடு உயிர் வாழ்ந்திருந்தாள்; அந்நியிேலும் அவன், அவளை வரைந்துகொள்ளும் கருத்தின்றி, பொருள் தேடற் குறித்துப் புறநாடு செல்லத் துணிந்தான் என்பதை அறியவே, அவள் உள்ளம் பெரிதும் துயர் உற்றது. தன் அருகிருக்கும் தோழியை நோக்கித் தோழி! காதலர் வரைந்துகொள்ளும் கருத்தின்றிக் காலங்கடத்துவது காண, நான் சிறிதும் கவலை கொண்டிலேன்; அவர் வெளிநாடு செல்வதால், நாம் இழக் கக்கூடிய அரும்பொருள் எதுவும் இல்லை. நலன் நாண் முதலாம் நம் பெண்மைக் குணங்கள் அனைத்தையும், நாம் எப்பொழுதோ இழந்துவிட்டோம். நம்மிடம் இப்போது இருப்பது நம் உயிர் ஒன்றே. அது, கற்புக் காலத்துக் கவின் மிக்க வாழ்வைக் கருதி, இன்னமும் நம்மைப் பிரியாமல் வாழ்