பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

கடமையுணர்வால் காதலன் பிரிவுத் துயரை அடக்கி வாழ்தலும் நெடிது நாள் நிற்கவில்லை. அவள் அவன் மீது கொண்ட காதல் அளவிடற்கரியது. அதனுல் அவன் பிரிவால் அவள் உற்ற துயர், அவளுடைய கடனறி உள்ளத் தின் உரத்தை அழித்து விட்டது. தனித்து வாழும் நாள் வளர வளர, அவள் துயரும் வளர்ந்தது. அது அவள் அகத்தை நிரப்பிப் புறத்தார்க்குப் புலனுகுமாறு பெருகிற்று; அவள் வாய்விட்டுப் புலம்பத் தொடங்கிளுள். நாணை மறந் தாள்; நிறையைக் கைவிட்டாள்; அவள் உள்ளம் உரம் அற்றுப் போய்விட்டது. பெண்டிர்க்கு ஆக்கம் அளிப்பன, அவர் உள்ளத்திற்கு உரம் ஊட்டுவன. நாண், நிறை முதலாம் பெண்மைக் குணங்களே அப்பென்மைக் குணம் அழிய வாழும் வாழ்வு வாழ்வாகாது. ஆதலின், நானும் நிறையும் அவளை விட்டுப் போன அன்றே, அவள் தன் உயிரையும் இழந்திருத்தல்வேண்டும். ஆனல் அவள் அவற்றை இழந்தும் உயிர் வாழ்கிருள். -

அவள் உடலைவிட்டு உயிர் பிரியவில்லை; அது ஒன்றே, அவள் உடலில் எஞ்சி உளது. ஆனல் அதுவும், இப்பொழு தோ, அல்லது இன்னமும் சிறிது பொழுதிலோ அவளே விட்டுப் போய்விடும். பிரியுமுன் அவன் காட்டிய பேரன்பை நினைந்து, அது இது காறும் பிரியாது வாழ்கிறது. அந்நினை வற்றுப் போயிருப்பின், அவன் பிரிந்த அன்றே, அவன் பிரி வால் மகிழ்ச்சி, அவள் மனத்தைவிட்டு மறைந்த அன்றே, அதுவும் அவளை விட்டுப் பிரிந்திருக்கும், அந்நினைவு ஒன்றே அவ்வுயுரை வாழவைத்துளது. அதுமட்டுமன்று; அக்காதல் நினைவோடு, காதலன் விரைந்து வந்து வரைந்துகொள்வன் என்ற நம்பிக்கையும் சேர்ந்து அவளை வாழவைத்துள்ளன. ஆளுல் அந் நம்பிக்கையும் அவளை நெடிது நாள் வாழ வைக்காது. அவன் விரைந்து வந்து சேர்ந்தால் அவள் வாழ் வாள். வாழ்வது மட்டுமன்று; அவள் வாழ்வு வளமும் வனப்பும் பெற்று விளங்கவும் செய்யும்.

அந்நிலையில் செயலற்றுக் கிடந்தவள் காதலன் பிரிவால் தனக்குற்ற கேடு, அக்கேடுற்றும் தன் உயிர் வாழ்தற்காம்