பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலங்களில், தம்மிடம் உள்ள தேனேக் குடிக்கும் ஆர்வ மிகுதியால், தாம் மலரும் காலம்வரை காத்திருக்கமாட் டாத வண்டுகள், தாம் மலர்வதற்கு முன்பே வந்து தம்மை மொய்க்கத் தொடங்கிவிடும் வண்டுகளில் வேட்கை அறிந்து தாம் மலரவேண்டிய காலத்திற்கு முன்பே மலர்ந்து மணம் நாறும். சான்றாேர் எனத் தம்மால் மதிக்கத்தக்க மாண் புடையாரைக் கண்டவுடனே, கடமை நெறி நிற்கும் நல் லோர், அவரை வரவேற்று, அவர் வேண்டுவனவற்றை, அவர் கூரு முன்பே அறிந்து, அவர் எதிர்நோக்கும் காலத் திற்கு முன்பே,அவர்க்குத் துணைபுரிவர்; அந்நல்லோர் செயை நினைப்பூட்டும் பெருமையுடையதன்றாே அக்காந்தள்; அத் தகைய காந்தள் மலரை நிறையக் கொண்டது நம் காதலன் நாடு” என அவன் நாட்டு மலர் மான்பு கூறுவாள்போல், பெண்ணே1 பருவம் வந்ததும் அவன் தானே மணக்க முன் வருவன்; அப்பருவம் வரும்வரையும் காத்திருப்பதே நம் கடமை; அதை நாம் கைவிட்டோம்; அப்பருவம் வாரா முன்பே, விரைந்து வந்து வரைந்துகொள்க என அவனே வற் புறுத்திைேம். அவனால் காதலிக்கப்பெற்ற நாம், கள வொழுக்க வாழ்வால் நம் துயர் பெருகுகிறது எனக் கூறிய தும், நம் கருத்துத் திருமணத்தின் பால் சென்றுளது என்ப தைக் குறிப்பால் அறிந்து, அம்மணப் பருவம் வருதற்கு முன் னரே, அதற்காவன மேற்கொள்ளத் துணிந்துவிட்டான்; என்னே அவன் பெருமை” என அவன் மாண்பினைப்பாராட்டி ஆகவே, “பென்னே! அவன் அன்பை ஐயுறற்க விரைந்து வந்து வரைந்து கொள்வன்; வருத்தம் ஒழிக’ என வற் புறுத்தி ஆற்றுவித்தாள். -

காந்தள் அம் கொழுமுகை காவல் செல்லாது வண்டு வாய்திறக்கும் பொழுதில், பண்டும் தாம் அறிசெம்மைச்சான்றேர்க் கண்ட கடன் அறிமாக்கள் போல இடன்விட்டு இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன், கன்னர் நெஞ்சத்தன்; தோழி! கின்னிலை