பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

έή

மாற்றம் நிகழக் காணினும், அது நிகழக் காரணம் யாதோ என எண்ணி எண்ணிக் கலங்குவாள். அத்தகையாள், தன் மகளின் இன்றைய தளர் திைையக் காணின், பெரிதும் கலுழ்வள்; மருத்துவனையும், மந்திரம் வல்லானேயும் அழைத்து, அது போக்க விரைவள்; ஆளுல் இத்தளர்ச்சி மன நோயை அடிப்படையாகக்கொண்டு வந்தது. ஆதலின், அதை அவர் போக்க அறியார்; மருந்தாலும், மந்திரத்தாலும் போக்கமாட்டாத நோய் எது என்பதைத் தாய் அறிவாள். அதனல், மகள் மணத்திற்கு அடிகோல முற்படுவள். மகள் காதலையோ, அவள் காதலனையோ அறியாளாதலின், அவளைப் பிறன் ஒருவனுக்கு மணம்செய்து கொடுக்கவும் நேரும்,

தன் தாயின் இயல்பறிந்த அப்பெண், அப்படியும் ஒரு நிலை வாய்த்துவிடுமோ என அஞ்சினுள். அவ்வச்சம், தோழி யின் வன்சொற்கு அஞ்சும் அச்சத்தினும் பெரிதாயிற்று. அதனல், துணிந்து தோழிபால் சென்றாள். உள்ளத் துய ரால் உடல் உரமிழந்து போவதை, அஞ்சாது அவளுக்குக் காட்டி, “தோழி! இத்தளர்ச்சியைத் தாய் ஆறியின், அவள் அறிவதன் விளைவாய் வந்து வாய்ப்பனவற்றை ஏற்று உயிர் வாழ்தல் என்னல் இயலுமோ? அந்நிலை வந்துற்றவிடத்து, இறவாது இருத்தல் என்னல் ஆமோ? இருத்தல் தான் நன்றாே?’ என வாய்விட்டுக் கூறி வருந்தினள்.

“ஆய்வளை ஞெகிழவும், அயர்வு மெய்கிறுப்பவும்

நோய்மலி வருத்தம் அன்னை அறியின் உளெளுே? வாழி தோழி!” a

a குறுந்தொகை 316. தும்பி சொகினனர்.

ஆய்வளே.தாய் ஆராய்ந்து அணிந்த அழகிய வளை: ஞெகிழ-கழல; அயர்வு-தளர்ச்சி, நோய்மலி-நோய் மிகுவ தற்குக் காரணமான -