பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 53 "ஆமாம் ஸார். ஒரு கோழி ஒரு ரூபாய். அதனால்தான் வாங்கினேன்" என்றான் பண்டாரம் மறுபடியும். "அதனால்தான் நான் அவனை வாங்கச் சொன்னேன்." என்று தாசில் தாரும் சேர்ந்து கொண்டார். கலெக்டரின் கண்கள் பிரகாசத்தைக் கொட்டின. "ஏக் கோலி ஏக் ரூப்யா? நீ ஒண்னு பண்ணு. டெய்லி ஒரு ரூபாய்க்கு ஒரு கோலி வாங்கி ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் பஸ்ல அனுப்பு" "யெஸ் சார். ஒரு கோழி ஒரு ரூபாய் வாங்கி அனுப்புறேன் லார் பண்டாரம் கிணற்றடியிலிருந்து பேசினான். "ஒன்டர்புல், ஏக் கோலி ஏக் ரூப்யா. இந்தா முப்பது ரூபாய். நாளைல இருந்து அனுப்பு. அடுத்த மாசத்துக்கு அப்புறம் பணம் தரேன். ஒண்டர் புல் டபில் நாட்," என்று கலெக்டர் பரவசமானார். கெஸ்ட் ஹவுஸிலிருந்து திரும்பி வரும்போது பண்டாரம் எகிறிக் குதித்தான். "என்ன சார் அநியாயம்? உருப்படுமா? ஒரு கோழி ஒரு ரூபாய்னா நம்பிட்டானே?" "உனக்கு என்ன கொழுப்பு? நீ ஏன் ஒரு கோழி ஒரு ரூபாய்னு சொன்னே? வேணுமய்யா உனக்கு" இப்போதெல்லாம் குமாஸ்தா பண்டாரத்தை யாரும் "காக்காய் பிடிப்பவன்" என்று சொல்லுவதில்லை. "கோழி பிடிப்பவன்" என்கிறார்கள்!