பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 போலீஸ் பொன்னப்பன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரே கூட்டம். போலீஸ்காரர் பொன்னப்பன் பிளாட்பாரத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்குப் பீடுநடை போட்டார். ஜி.டி. எக்ஸ்பிரஸ் தயாராக இருந்தது. பொன்னப்பனின் இடது கை லாட்டியைப் பிடிக்க, வலது கை மீசையைப் பிடிக்க, அங்குமிங்கும் பார்த்துக் கொண்டே வந்தார். சே ஒரு கேலம் அகப்படவில்லையே அவர் போட்ட சபதத்தை எப்படி நிறைவேற்றுவது? போலீஸ்காரர். அன்று காலையில் அந்த மிலிடேரி ஒட்டலில் தான் போட்டிருந்த வீர சபதத்தை நினைத்துக் கொண்டார். அவருக்கு வயிறு எரிந்தது. அந்த ஹோட்டலில்தான், அவர் வழக்கமாக வறுத்த கறி பரோட்டா சாப்பிடுவது வழக்கம். அங்கே சாப்பிடுவதை எப்படி வழக்கமாக வைத்திருந்தாரோ, அதேபோல், தின்பதுக்குக் காசு கொடுப்பதில்லை என்பதையும் பழக்கமாக வைத்திருந்தார். அன் றைக்குப் பார்த்துக் கேட்கக்கூடாத கேள்வியை அந்த ஹோட்டல் முதலாளி கேட்டுவிட்டார். ஒரு சானிட்டரி இன்ஸ்பெக்டர் வந்து விட்டு அப்போதுதான் போயிருந்தார். அந்தச் சமயத்தில் போலீஸ்காரர் வாயைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே வந்தார். * கல்லாவில் இருந்த முதலாளிக்கு வயிறு எரிந்தது. கேட்கக் கூடாத அந்தக் கேள்வியைக் கேட்டு விட்டார். "லார், சாப்பிட்டதுக்குக் காசு கொடுங்க." வேறு யாரையோ சொல்வதாக நினைத்த பொன்னப்பன் வாசலைத் தாண்டுகையில் சர்வர் வந்து, அவர் தொப்பியை லேசாகத் தட்டி, "முதலாளி கூப்பிடறாங்க" என்றான். பின்னோக்கி வந்த போலீஸ்காரரிடம் முதலாளி, "லார், சாப்பிட்டீங்களே, காக கொடுக்க வேண்டாமா? மறந்து விட்டீங்களா?" என்றார். பொன்னப்பனின் மீசை துடித்தது. பரோட்டா சாப்பிட்டதற்குப் பணமா? சமாளித்துக் கொண்டே "காசு கொண்டு வரலிங்க" என்றார்.