பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 55 "என்னைக்குக் கொண்டு வந்தீங்க? சொல்லுங்க பார்ப்போம்..ம் நானும்தான் இந்த ஹோட்டலை எடுத்துப் பதினைந்து வருஷமாச்சு: ஒருநாள் கூட பிரேக்' இல்லாம சாப்பிடுறீங்க, ஒரு நாளாவது காசு கொடுத்திருக்கிங்களா?" அப்போது பார்த்து, ஒரு மணி நேரம் வரை ஹோட்டலில் இருந்து ஒரு சிங்கிள் டி சாப்பிட்ட் ஆசாமி ஒருவர், பதினைஞ்சு பைசா பில்லை நீட்டினார். முதலாளிக்கு மீண்டும் கோபம் வந்தது. "சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. நான் எத்தனை பேருக்குத்தான் தண்டத் தீனி போட முடியும்?" பொன்னப்பனின் மீசை துடித்தது. இவன் முதலாளி மாதிரியா பேசுறான்; சப்-இன்ஸ்பெக்டர் கூட இப்படிக் கேட்க மாட்டார். "சூடா வேனும் சூடா வேணுமுன்னு கேட்கிறீங்களே. அதே மாதிரி காசையும் தர வேண்டாமா?"என்றார் முதலாளி, மீண்டும். அவருக்குச் சூடாகப் பதில் சொல்ல வந்த போலீஸ்காரர் பொங்கி வந்த சினத்தை அடக்கிக் கொண்டார். அவமானமாகப் பேசிய முதலாளியைக் கெஞ்சலாகப் பார்த்துக் கொண்டு, மனத்தில் வீரசபதம் ஒன்றைப் போட்டுக் கொண்டு நிமிர்ந்த நன்னடையோடு, பொன்னப்பன் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தார். எப்படியாவது, ஒரு கேஸைப் பிடித்து அந்த முதலாளியின் திமிரை அடக்க வேண்டும். அங்கே என்ன? அந்த மைனர், அந்தப் பொண்ணை 'பாலோ பண்றானா? பண்ணட்டும். அவகிட்ட போய் ஏதாவது பேசப் போறான். அவள் அவனைத் திட்டப் போறாள். கேஸ் கிடைச் சிட்டுது... பொண்ணை பாலோ பண்ணின மைனரை அவர் ’பாலோ'பண்ணினார். அவள், அவனைக் கவளிச்சதாகவோ, கேர்' பண்றதாகவோ தெரியலை. , குடும்பப் பெண் அவள் பய எக்கச் சக்கமா பேசிட்டு, எக்கச்சக்கமாக மாட்டிக்கப் போறான். கேஸ் கிடைச்சுட்டுது... அதோ, அந்தப் பயல் அவள் கிட்ட நெருங்கி, அவள் கூடவே நடக்கிறான். அவள் ஒரு முறைப்பு முறைக்கிறாள். இடது கோடியில் வந்தவள் வலது கோடிக்கு ‘லைனை மாற்றிக் கொள்கிறாள். அந்தப்