பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு-சமுத்திரம் 57 அவர்களைப் பாராதது போல் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த ஆசாமி ஒரு கிழிந்த சட்டையைப் போட்டுக் கொண்டு. நாலு முழ வேட்டியை இரண்டு முழமாகச் சுருக்கிக் கட்டிக் கொண்டு, நின்றான் அவளும் ஒரு பழைய சேலையைக் கட்டிக் கொண்டு தோள் பக்கம் கிழிந்திருந்த ஜாக்கெட்டைக் கிழிந்திருந்த முந்தானி முனைப்பால் மூடிக் கொண்டிருந்தாள். ரயிலுக்குப் பச்சை விளக்குக் காட்டப்பட்டது. விசில் சத்தம் கேட்டது. பொன்னப்பன் பாய்ந்தார். "யோவ்! பெட்டில என்னப்பா வச்சிருக்க? பெட்டியைத் திறந்து காட்டு." "வண்டி நகரப் போவுது இப்போ வந்து கேக்கறிங்களே, நாயமா?" - "டேய், பெட்டியைத் திறந்து உள்ள என்ன இருக்குன்னு காட்றியா? இல்ல, உள்ள தள்ளணுமா?" வண்டி நகரத் தொடங் கியது. - அந்த ஆள் சத்தம் போட்டான். "அநியாயம் பண்ணாதீங்க லார். இதுவரைக்கும் பேசாம நின்னுட்டு - இப்போப் பேசினா எப்படி? நாயமா?" "அந்தக் கதை வானாம். உன் மேல் சந்தேகமா இருக்கு, பெட்டியைத் திறந்து காட்டு. உம் காட்டு." அந்த ஆசாமி மருண்டான். வண்டி வேகமாகப் போகத் தொடங்கியது. பைக்குள் இருந்து ஓர் இரண்டு ரூபாயை நீட்டினான். பொன்னப்பனின் ரத்தம் கொதித்தது. "யோவ், என்னை லஞ்சம் வாங்கறவன்னு நினைச்சியா? பெட்டியைத் திற....ம்...திற. உன்னெ என்ன செய்யறேன் பாரு! நட போலீஸ் ஸ்டேஷனுக்கு." அவர் நறநற என்று பல்லைக் கடித்தார். அந்த ஆசாமி ஐயா லஞ்சம் வாங்காதவர்னு எனக்குத் தெரியாது, " என்று சொல்லி, இரண்டு ரூபாயைப் பைக்குள் வைக்கப் போனான்,