பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 குற்றம் பார்க்கில் "யோவ், என்னை என்ன ரெண்டு ரூபாய் லஞ்சம் வாங்கறவன்னு நினைச்சியா?" "என் கிட்ட இதுக்கு மேல இல்லை ஸ்ார்." "இதுக்கு மேல பேசாத கீழே இறங்கு. இல்லன்னா பத்து ரூபாயை இறக்கு," என்று போய்க் கொண்டிருந்த வண்டி பின்னால் ஓடினார். அந்த ஆசாமிக்கு யோசிக்க நேரமில்லை. பைக்குள் இருந்த ஒரு நோட்டை அவர் கைக்குள் திணித்தான். திணித்துவிட்டு, பிறகு கத்தினான். "யோவ் பத்து ருபான்னு நினைச்சு, நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்திட்டேன். நூறைக் கொடு, பத்து தர்றேன். நூறைத் தா. பத்து தர்றேன். யோவ். யோவ். நாயமா?" பொன்னப்பன், அவனைக் கண்டு கொள்ளவில்லை. கேஸைப் பிடித்த திருப்தியோடு நடைபோட்டார். அந்த ஆசாமி திட்டிய திட்டுக்கள் இஞ்சின் சத்தத்தில் கேட்கவில்லை. அவர் நேராக, அந்தப் பழைய ஹோட்டலுக்கு வந்தார். முதலாளிக்கு உதைப்பு, பழையபடி தின்னுட்டு கலாட்டா பண்ண வந்திருக்கானா? எதிலேயும் மாட்ட வச்சிடுவானோ? பொன்னப்பன், மிடுக்காக உட்கார்ந்து ஆர்டர் கொடுத்தார். சர்வர் ஒசி கிராக்கியாக நினைத்து, சாவகாசமாய் வந்தான். போலீஸ்காரருக்கு ஆத்திரம் பொங்கியது. வார்த்தைகளில் சூடேறியது. "ஏண்டா, என்னை என்ன போக்கத்தவன்னு நினைச்சியா? சீக்கிரம் கொண்டா, ஒரு பிளேட் பிரியாணி, கோழி குருமா...ம் சீக்கிரம். வறுத்த கறி.ஈரல், மூளை கொண்டு வர இவ்வளவு நேரமா? மூளை இருக்கா உனக்கு?" கல்லாவில் இருந்த முதலாளிக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஒரு நாள் ஏதோ ஆத்திரத்தில் சொன்னதுக்காக, இந்த போலீஸ்காரன் வந்து மிரட்டப் பார்க்கிறானே? தட்டுக்கள் தவிர மற்றவற்றைத் தின்று முடித்த பொன்னப்பன், 'பில்' கொடுக்காமல் போன சர்வரைப் பார்த்து,