பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 59 "என்னை என்ன பிச்சைக்காரன்னு நினைச்சியா? பில் கொடுடா" என்று அதட்டினார். பிறகு அலட்சியமாக, பில்லை மேலேயும், புத்தம் புது நூறு ரூபாய் நோட்டைக் கீழேயும் வைத்து, முதலாளியிடம் நீட்டினார். முதலாளிக்கு ஒரே ஆச்சரியம். "சீக்கிரம் சேஞ்ச் கொடுங்க." போலீஸ்காரர் அதட்டினார். "ஐயா தப்பா நினைக்கக் கூடாது. உங்ககிட்ட காலையில மரியாதைக் குறைவா நடந்துக்கிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. இந்தாங்க உங்க நூறு ரூபா " அலட்சியமாக, அந்த ரூபாயை வாங்கிக் கொண்டு நடக்கப் போன அவரை, முதலாளி எழுந்து வந்து குறுக்காக நின்று கும்பிட்டுக் கொண்டே, "ஐயாவைக் காலையில் பேசினதிலிருந்து என் மனசு கேட்கலை, நீங்க என்னை மன்னிச்சதுக்கு அடையாளமா, கூலா ஒரு டிரிங் குடிச்சிட்டுப் போகணும்," என்றார். பொன்னப்பனின் மனகம் கேட்கவில்லை வாயும் கேட்கவில்லை. விறைப்பாக நடந்து, ஹோட்டலில் ஒரு மூலையில் இருந்த பேமிலி' ரூமுக்குள் உட்கார்ந்தார். கோக்கோ கோலாவை உறிஞ்சிக் கொண்டிருந்த போலீஸ்காரர், தன்னைச் சுற்றிப் பத்துப் பதினைந்து போலீஸ்காரர்களும், ஒரு மப்டி ஆசாமியும் நின்று கொண்டிருப்பதைப் பார்த்துத் திகைத்தார். அவர் பையன் ஐ.பி.எஸ். எழுதியிருந்தான். பாஸாகி இருப்பானோ? மாட்டானே! ஒரு வேளை அவன் பாலாகி, தன்னைப் பாராட்ட வந்திருக்காங்களோ? உம். இதற்குள் ஒரு போலீஸ்காரர். "உன் பைக்குள் இருக்கிற நூறு ரூபாய் நோட்டை எடு", என்றார் பசங்க பங்கு Gبه ناچ வந்திருக்காங்களோ? பொன்னப்பன் தயங்கினார். இதைப் புரிந்துகொண்ட லிபிஐ (மத்திய புலன் விசாரணை) ஆசாமியான 'மப்டி', "அந்த நூறு ரூபாயை எடுய்யா", என்றார் அதட்டலாக பிறகு பொன்னப்பன் தந்த நூறு ரூபாயை உற்றுப் பார்த்தார். "இந்த ரூபாய் உனக்கு எப்படிக் கிடைத்தது?"