பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 குற்றம் பார்க்கில் பொன்னப்பன் சமாளித்துக் கொண்டே, "என்ன ஸார் கிருமினலை விசாரிக்கிறது மாதிரி விசாரிக்கிறீங்க. ஆபீஸ்ல கொடுத்த சம்பளப் பணத்தில் மிஞ்சியிருந்த நோட்டு இது" என்றான். போலீஸ்காரர்கள், பொன்னப்பனைப் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள கேஷியரிடம் அழைத்துக் கொண்டு போனார்கள். கேஷியர் ரிக்கார்டைக் காட்டினார். "அவ்வளவும் பத்து ரூபாய் நோட்டா வேணுமுன்னு கேட்டு வாங்கினார். என்கிட்ட நூறு ரூபாய் நோட்டே கிடையாது." ஒரு போலீஸ் அதிகாரியைப் பார்த்து, மப்டி கண்ணடித்தார். பொன்னப்பனின் கைகளில் விலங்கு மாட்டப்பட்டது. தங்கள் வர்க்கத்தில், 'இப்படி ஒரு காளான் முளைத்து விட்டதே' என்று ஒரு போலீஸ்காரர்கூட பாக்கியில்லாமல், அத்தனை பேரும், பொன்னப்பனைத் தலா இரண்டு கைகளாலும், இரண்டு கால்களாலும் உதைத்தார்கள். போலீஸ்காரர் பொன்னப்பன், மன்னிக்கனும், இனிமேல் அப்படி அழைப்பது சட்டப்படி குற்றம் பொன்னப்பன் இப்போது 'லாக்கப்பில் இருக்கிறான். லாக்கப்பில் இருக்கும் கிரிமினல் குற்றவாளிக்கு 'ர்' என்ன வேண்டிக் கிடக்கு? கள்ள நோட்டு அடித்த குற்றத்தின்பேரில் பொன்னப்பனை சஸ்பெண்ட்' செய்து போலீஸ் கஸ்டடியில் வைத்திருக்கிறார்கள். தீவிர புலன் விசாரணை நடந்து வருகிறது