பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 குட்டி மஸ்தான் அந்தக் கடையின் போர்டை எழுதியவர், ஒரு மார்டன் ஆர்டிஸ்டாகத்தான் இருக்கவேண்டும். வி. என்ற எழுத்தின் அடிக் கோட்டை, கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைப் போல, சற்று வளைத்துவிட்டு. மேலே கொக்கியையும் சுருக்கிவிட்டதால், லீ' மாதிரி தெரிந்தது. ஆகையால், கடைக்கு வருபவர்கள், அந்தப் போர்டைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, நியாய லீலைக் கடை" என்று படிப்பார்கள். இதற்காகக் கடைக்காரர் "அரிசி ஸ்டாக் இல்லை" என்று சொல்வது சரியில்லைதான் அவரிடம் அதைப் பற்றிக் கேட்டால், "எதுதான் சரியாய் இருக்கு?"என்பதுடன் அப்படிக் கேட்டதற்குத் தண்டனையாகச் "சர்க்கரை (உங்களுக்கு) ஸ்டாக் இல்லை" என்பாராம் இந்த வில்லாதி வில்லன், அன்று வாடிக்கைக்காரர்களை எப்படி விரட்டியடிக்கலாம் என்று யோசித்தவராய், போர்டில், 'இருப்புக்கு’க் கீழே இல்லை' என்று எழுதிக் கொண்டிருக்கும் போது, ஒரு ஆசாமி வந்து நின்றார் கடைக்காரர் அவரைப் பார்க்காமலே "ஸ்டாக் ஒண்னும் இல்லை சார்" என்றார். வந்தவர் விடுவதாகத் தெரியவில்லை "இது நியாய விலைக் கடைதானே?" கடைக்காரருக்குச் சுருக் கென்றது. "ஏன், போர்டில எழுதியிருக்கது கண்ணு தெரியலியோ? சரி...சரி. ஸ்டாக் இல்லை போங்க?" "இது தான் எனக்கு ஆபீஸ் டயம்." "ஆபீஸ் டைம்ல அரிசி வாங்றது தப்புங்க." "அரிசி வாங்கறது தப்புதான். அரிசி ஸ்டாக்கை செக்' பண்றது தப்பில்ல." "நீங்க என்ன சொல்றீங்க?"