பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 குற்றம் பார்க்கில் "செக்கிங் இன்ஸ்பெக்டர்னு என்னைச் சொல்லுவாங்க". அவ்வளவுதான். கடைக்காரரின் கடுகடு முகம், கிளுகிளுவானது. கடைக்குள் கோணிகளைச் சுமந்து கொண்டிருந்த ஒரு ஸ்டுலை எடுத்து வெளியே போட்டார். தோளில் தொங்கிய துண்டை எடுத்து அதைத் துடைத்தார். ஸ்டுல் மேலும் அழுக்காயிற்று பிறகு ஆபீசரை உட்காரும்படி சைகை செய்தார். கடைக்காரர் தட்டி விட்ட மின்காற்றில், உள்ளே உறங்கிய மைதாவம், ரவையும். கடைக்குள் ஸ்டாக்காக இருக்க விரும்பாதவைபோல், ஆபீஸரின் முகத்தில் ஸ்டாக்காயின. கடைக்காரர் தலைவிரிகோலமா, கடைக்காரப் பையனிடம் கத்தினார். "டேய் முனுசாமி, உடுப்பியில போயி, ஐயாவுக்குச் சூடா ஒரு ஸ்பெஷல் காபி வாங்கி வா." t அரிசி வகையறாக்கள் மாயமாய் மறைவது போல் பையனும் மறைந்தான். "ஐயாவுக்குக் காபி மட்டும் போதுமா?" "போதாது உன் ரிஜிஸ்டர்களும் வேணும்." "ஐயா புதுசோ?" "ஆமாம், உன் கடைக்குப் புதுக. ஆனால் வேலைக்குப் பழசு." விடாக் கண்டனும், கொடாக்கண்டனும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கையில், பாட்டியம்மா ஒருத்தி قاہٹا ونچی வந்தாள். இந்தச் சமுதாயத்தில் நடமாடித் திரியும் மனிதர்களைப் பார்க்க விரும்பாததுபோல், அவள் முதுகு நிலத்தைப் பார்த்தது. இரண்டு கைகளும், கால்களுக்கு இணையாக, செங்குத்தாய் தொங்குவது போல் கோணைத் தென்னையைப் போல், அவள் வளைந்திருந்தாள். ஊர்ந்து வருவதுபோல் வந்த அவள் "இன்னைக்காவது அரிசி கிடைக்குமா நயினா?" என்றான். அந்த வார்த்தை அந்த ஜீவக் கூட்டுக்குள் இருந்து வந்ததே பெரிய காரியம்! கடைக்காரர் வார்த்தை தவறாதவர். ஆகையால் நேற்று அவளிடம் சொன்னதையே இன்றும் தவறாமல் சொன்னார்.