பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.-சமுத்திரம் 63 "அரிசி இன்னும் வரல நாளிக்கு வா." "தம்மா படி அரிசிக்கு எம்மாந்தரம் வர் ரதய்யா? நாயமா நயினா? கெய்வின்னு நினைச்சாக்காட்டியும் அரிசி தாய்யா, ஐயா." "ஆயா உன்கிட்ட எத்தனைவாட்டி சொல்றது? ஸிவில் சப்ளை கோடோன்ல இருந்து அரிசி வர்ரப்போதான் தரலாம். நான் என்ன பண்றது?" "எப்பத்தாம்பா கோடோன் அரிசி வரும்?" "எனக்கு ஜோலியமா தெரியும்? வர்ரப்போ வரும். சரி. நடையைக் கட்டு காலங்காத்தாலே ரோதனை பண்ணாதே." கிழவி, தன்னையே ரோதனை பண்ணிக் கொண்டாள். பர்மாவில் இருந்து, இரண்டாவது உலகப் போரின் போது இங்கே வந்த பலரில் அவள் ஒருத்தி. பசியால் மனிதர்கள் மிருகமாவதைப் பார்த்தவள் ஆனால், இங்குப் பசியறியாதவர்களே மிருகமாவதை இப்போது தான் பார்க்கிறாள். கடைக்காரரிடம் பேசுவதற்குச் செலவிடும் சக்தியை, நடக்கச் செலவிடலாம் என்று நினைத்தவள் போல், வந்தவழியே நடந்தாள். செக்கிங் இன்ஸ்பெக்டர், கடையை நோட்டம் விட்டார். "ஏய்யா, உள்ளே முப்பது நாப்பது கிலோ அரிசி இருக்கும்போல தெரியது.ஸ்டாக் இல்லேங்றே." "தப்புதான் ஆனால் தப்பாமல் அதைத் தனியே எடுத்து வைக்கும்படி ஒருவர் போன் பண்ணினாரு." "கார்டு ஹோல்டரா?" "கார்டு ஹோல்டர்னா எவன் கவலைப்படுகிறான் சார்?" "பிறகு யாருக்குய்யா?" கடைக்காரர், புன்முறுவலைப் பூக்க விட்டுக் கொண்டே செக்கிங்கின் காதில், அந்தத் திருநாமத்தைச் சொல்ல, அந்தக் காதின் ஆசாமி, உடம்பை ஒரு சிலிர்ப்பு சிலிர்த்துக் கொண்டே, சிம்ம சொப்பனம் கண்டவர்போல் திடுக்கிட்டு பிறகு "சரி, சரி, எனக்கெதுக்கு வம்பு ஒன் ரிஜிஸ்டர்ங்கள எடு" என்றார். இன்ஸ்பெக்டர் ஏ ரிஜிஸ்டர் என்று வழங்கப்படும்,