பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 குற்றம்-பார்க்கில் கார்டுக்காரர்கள் ரிஜிஸ்டரைப் புரட்டினார். அதுக்குள், உடுப்பிக்குப் போன பையன் ஓடிவந்தான். இன்ஸ்பெக்டர் காபி ஆறுவதற்காக, ரிஜிஸ்டரின் மேல் 'டபராவை வைத்துவிட்டு, பிறகு அதை எடுத்து எடுத்துக் குடிப்பதும், அப்படி எடுக்கையில் ரிஜிஸ்டரின் பக்கங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டு ஆயிரத்து நூறு பெயர்களையும் பார்த்துக் கொண்டு வந்தவர் 18வது சீரியல் நம்பரில் உள்ள காமாட்சி, மீண்டும் 98ஆம் நம்பரில் அவதாரம் எடுத்ததையோ, 80ஆம் நம்பர் கோவிந்தனுக்கு 50ஆம் நம்பரில் பூர்வஜென்மம் இருந்ததையோ, அவர் கவனித்ததாகத் தெரிய வில்லை. ஸ்பெஷல் காபியாச்சே! என்றாலும், காபி வாசனை மறைந்ததும், செக்கிங் இன்ஸ்பெக்டரின் இரக்கமும் மறைந்தது. ரிஜிஸ்டரைப் புரட்டிக் கொண்டே, கடைக்காரரைப் புரட்டினார். "யோவ், நான் வீடு வீடாய் போய், கார்டு கார்டாய்ச் செக் பண்ணனும். போலிக் கார்டு இருக்கான்னு பார்க்கணும்." கடைக்காரர் "அதுதான் அலிஸ்டெண்ட் கமிஷனர் ஆபீஸ்ல, கவுண்டர்பாய்ல்ஸ் வச்சி, செக் பண்ணுறாங்க. அப்படிச் செக் பண்ணு ைபிற்பாடுதான் சரக்கு வருது. செக் பண்ணுனதை ஏன் செக் பண்ணனும்?" என்றார். "அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஆபீஸைப்பத்தி எனக்குச் சொல்லித் தர்றியா? அந்த ஆபீஸ் இல்லாட்டா, அரிசி இன்னும் நிறையக் கிடைக்கும். நான் அங்கே இருந்துதான் டிபுடேஷன்ல போயிருக்கேய்யா. என்கிட்டேயே காது குத்றியே?" "ஸ்ார்! உங்க சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மட்டும் யோக்கியமா? போனமாசம் ஒரு கூத்து கேளுங்க. பொதுவா, கோடோன்ல இருந்து வந்த அரிசி வகைகளை லாரில கொண்டு வரும்போது எடை எத்தனைங்றதையும் லாரி டிரைவர் கிட்ட எழுதி அனுப்புவாங்க. போன மாதம் பின்னாலேயே எடை விவரம் வருது. நீ முன்னாலேயே வந்துட்ட லாரியில் இருந்து சரக்கை கிளியர் பண்ணு' ன்றாங்க நான் இறக்கிட்டேன். பத்து நாள் கழிச்சி, எடை பட்டியலை அனுப்பினாங்க. லாரியில் வந்த எடையை விட அரைப்பங்கு அதிகம் போட்டு, என்கிட்ட இருந்து ரிகவரி" பண்ணிட்டாங்க இந்த மாதிரி அக்ரமம் எங்கேயும் உண்டா? நீங்களே சொல்லுங்க ஸார் "