பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு-சமுத்திரம் 65 இன்ஸ்பெக்டர் சொன்னார். "இவ்வளவு அக்கிரமம் நடந்திருக்கே, நீ ரிப்போர்ட் பண்ணினியா? புட் கமிசனருக்கு எழுதினியா?" "இல்ல ஸார். "ஏன் இல்ல? நான் சொல்லட்டுமா? உன் வீக்னஸ் கோடோன்காரங்களுக்குத் தெரியும். திருடனுக்குத் தேள் கொட்டினது மாதிரி, நீங்க அரிசி மூட்டையில் வாளி வாளியா தண்ணி ஊத்தி, ஓவர் வெயிட் பண்றிங்க. அவரும் போன்ல பேசி ஓவர் வெயிட் பண்ணிட்டார். உங்க 'வெயிட்' பிரச்சினையை ஜனங்களும் பார்த்துக்கிட்டு சந்தர்ப்பத்துக்காக வெயிட்' பண்றாங்க, கியூவில் மட்டும் வெயிட் பண்றதா நினைக்காதே சரி, சரி, வா...கார்டுங்கள செக்' பண்ணலாம் " கடைக்காரர் ஒரு பரோபகாரி. ஆகையால் "ஐயா, தப்பா நினைக்கக் கூடாது. இப்போ ஏழை ஜனங்க வர்ர நேரம் பாவம். கஷ்டப்படுற ஜனங்க ரவைக்காவது, மைதாவுக்காவது வருவாங்க அவங்களுக்குச் சரக்குக் குடுக்கிற நேரத்துல வீடு வீடாய் அலையுறது சரியாய்த் தோனலே" என்றார். இன்ஸ்பெக்டரும் ஒரு பரோபகாரி. ஆகையால், "ஆமாய்யா, ஏழை ஜனங்கள காக்க வைக்கிறது தப்பு நீ ரிஜிஸ்ட்டர எங்கிட்ட கொடு, நானே செக் பண்ணி, ஏதாவது தப்புத் தண்டா இருந்தா, நேரா ஆபீஸ்ல போயி எழுதிக்கிறேன்." கடைக்காரர் மறுமொழி கூறாமல், திறந்த கடையைப் பூட்டினார். செக்கிங்கும் 'கடையும்' நடை போட்டனர். முதல் நம்பர் முனியாண்டி வீட்டுக்குப் போனார்கள். முனியாண்டியிடம் கார்டு இருந்தது. இன்ஸ்பெக்டர் திருப்தியடைந்தார். கடைக்காரருக்கு, போன உயிர் திரும்ப வந்தது. முனியாண்டியிடம் ரேஷன்கார்டு இருப்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, அவன் அந்த கார்டை வேற கடையில் பதிந்து வைத்திருப்பது. இதை அறிய, செக் கிங் ஸாருக்குத் தோன்றவில்லை. இருவரும் அலையும் கோலத்தைப் பார்த்து, சிலர் தத்தம் வீடுகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டார்கள். 'செக்கிங்' இன்ஸ்பெக்டரிடம் இருந்த ரிஜிஸ்டரைப் பார்த்த சிலர், அவர்களை 'டொனேஷனுக்கு வருவதாக நினைத்து தலை மறைந்தார்கள். G5 - LJay - 5.