பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 குற்றம்-பார்க்கில் நாலாவது சீரியல் நம்பரில் ஒரு பெண். இன்ஸ்பெக்டர் அவளிடம் "கார்டு இருக்கிறதா?" என்று கேட்க, அவர் "கார்டு இருக்கு, பனந்தான் இல்லே" என்றார். இன்ஸ்பெக்டருக்குத் திருப்தி, கடைக்காரருக்கு ஒன்றும் புரியாத மகிழ்ச்சி. அந்தப் பெண் சொல்ல வந்தது பால்கார்டைப் பற்றி, எப்படியோ கடைக்காரர் பிழைத்தார். மேலும் சில வீடுகளைப் பார்த்தார்கள். சரியாக இருந்தன. இதுதான் சமயம் என்று நினைத்த கடைக்காரர், "ஸ்ார், ஏழை ஜனங்க காத்திருப்பாங்க, போகலாமா? " என்றார். "ஆமாய்யா, நீ போயிடு. நான் நிதானமாகப் பார்த்துட்டுப் போறேன்." கடைக்காரர் பதில் பேசாமல் கோவிந்தசாமி வீட்டைக் கண்டுபிடித்தார் கோவிந்தசாமி வெளியே போயிருப்பதாகவும், அவரிடம் ரேஷன் கார்டு இருப்பதாகவும் அண்டை வீட்டு நாராயணசாமி சொன்னார். செக்'கிங் திருப்தியுற கடை'க்குப் போன உயிர் திரும்ப வந்தது. வெளியே போயிருக்கிறார்' என்ற நாராயணசாமியின் வார்த்தைக்கு அந்த ஆசாமி நாலைந்து மாதமாக ஊரில் இல்லை என்ற டிக்ஷனரி மீனிங்கும், அந்த ஆசாமியின் பேரில் சரக்குப் போட்டு, கடைக்காரர் சக்கையோடு போடுகிறார் என்பதும் இன் ஸ்பெக்டருக்குத் தெரியவில்லை. போன வீட்டிற்கே, மீண்டும் போவதைப் பார்த்த இன்ஸ்பெக்டருக்கு ஒரு சந்தேகம் வந்தது. ரிஜிஸ்டரை உற்றுப் பார்த்தார் "ஏய்யா, இந்த வீட்ல. ராமசாமி இருக்கிறாரான்னு ஏற்கன்வே பாத்துட்டோம் இன்னொரு வாட்டி அவன் எப்படிய்யா முளைச் சான்?" கடைக்காரர் வெலவெலத்துப் போய், ரிஜிஸ்டரைத் தாங்கிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டரின் முழங்கைக்குள் முகத்தை நீட்டினார் அவருக்கு ஒரு ஐடியா தோன்றியது. வியாபாரியாச்சே! "ஸ்ார். அது ராமசாமி இது இராமசுவாமி. இரண்டு பேரு ஒரே வீட்டில் இருக்காங்க எழுத்து வித்தியாசம் தெரியுதுல்லா?" இன்ஸ்பெக்டருக்குப் பாதிச் சந்தேகம் தீர்ந்துவிட்டது. மீதிச் சந்தேகம் தீர்த்துக் கொள்ள நினைத்தவர்போல், அதை விட்டு, படிக்கட்டில் இருந்த நபரைப் பார்த்து இந்த வீட்டில் ரெண்டு