பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 குற்றம்-பார்க்கில் "இப்போ என்ன? சொல்லு." "வச்சிட்டேம்பா." "நீ என்ன சொல்ற?" "அடகு வச்சிட்டேம்பா." இன்ஸ்பெக்டருக்கு பயங்கரமான கோபம். "ஏம்மா, உனக்கு புத்தி இருக்கா? அடகு வைக்கிறது இருந்தா, நம்ம நகை நட்டுகளை வைக்கணும். இல்லன்னா பாத்திரங்கள வைக்கனும். ரேஷன் கார்டையா வைக்கிறது?" "எல்லாத்தையும் வச்சிட்டேம்பா. அதுங்க தீர்ந்து பூட்டு: அதனாலதான் இது வச்சேன்." "எந்த மடையங்கிட்ட வச்ச? சொல்லு அவனையும் உன்னையும் உள்ளே தள்றேன்." "இதோ கீறாரே, இவரண்டதான் வச் சேம்பா." இன்ஸ்பெக்டர், கடைக்காரரைப் பார்த்து முறைத்தாள். அவர் ஒரு நொடி மயங்கி, மறுநொடி தயங்கி பிறகு சமாளித்தார். "ஸார், இந்த அம்மாவுக்கு எதையும் வச்சித் திங்கறது தான் தொழிலு. ரேஷன் கார்டை அடகு பிடிக்கவும் ஆளுங்க இருக்காங்க. எவன் கிட்டேயாவது வச்சித் தொலைச்சி, அரிசி இல்லேன்னு கஷ்டப்படுமேன்னு இரக்கப்பட்டு, நான் பிடுங்கி வச்சிட்டேன்." இன்ஸ்பெக்டர், கடைக்காரர் சொல்வது சரிதானா என்பதுபோல் அந்தப் பெண்ணைப் பார்த்தார். கடைவாலா, சுதாரித்துப் பேசினார் "ஏய் பொண்ணு, உள்ளதைச் சொல்லு. இல்லன்னா ஐயா, உள்ள தள்ளிடுவாரு ஒன் கார்டு என்கிட்ட இருந்தாலும், முந்தாநாள் அரிசி தந்தேனா இல்லியா? உள்ளதைச் சொல்லு. இல்லன்னா ஐயா உள்ள தள்ளிடுவாரு. கடைக்காரர் பயமுறுத்தும் பாணியில் கேள்விகளை அடுக்கினார். அந்தப் பெண் பயந்துவிட்டாள். "ஆமாங்க, கடைக்காரர் முந்தாநாள் தந்தாரு வாய்க்கு அரிசி நல்லா கீது" என்று, 'உள்ளதைச் சொன்னாள்