பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க-சமுத்திரம் 69 செக்கிங்ஸ்ாரும், கடைக்கார அண்ணாச்சியும், நாதித் தெருவில் போர் டொண்டி' அதாவது 420 ஆம் நம்பர் நல்லகண்ணுவைக் கண்டுபிடிக்க அலைந்தார்கள் நம்பரையும் காணவில்லை. நபரையும் காண வில்லை. இன் ஸ்பெக்டர் தெருப்பக்கத்தில், பீடிக் கடைக்காரரை விசாரித்தார். கடைக்காரர், கையைப் பிசைந்தார் அந்தத் தெருவில் 317க்குப் பிறகு நம்பரே கிடையாதாம். கடைக்காரர் தலையைப் பிசைந்தார். இன்ஸ்பெக்டர் தன் கண்டுபிடிப்பில் பெருமிதம் கொண்டார். "கடைசியில் நீயும் கள்ளக் கார்டு தானா?" கடைக்காரர் பதில் சொல்வதற்கு முன்னால் இன்ஸ்பெக்டரின் கேள்வியைக் காதிற்போட்டுக் கொண்ட ஜிப்பாக்காரர் ஒருவர், "அந்த அநியாயத்தை ஏன் கேக்கரீங்க? கள்ள கார்டுங்க மட்டுமில்ல, தராசுத் தட்டுல அரிசியை 'தொப்புன்னு வேகமாகப் போட்டு. தட்டை மேலே தூக்கி, அது கீழே வர்றதுக்கு முன்னாடியே அரிசியை இறக்கிடறது கூட்ட நெரிசலிலே யாரும் இதைப் பார்க்கிறது கிடையாது. இத கேக்க நாதியில்ல. மஸ்தானையும், பாக்கியாவையும் பிடிக்கிறது சரிதான். இந்தக் குட்டி மஸ்தான்களை விட்டு வைக்கிறது நாட்டுக்குச் சனி போகலன்னு அர்த்தம்." இன்ஸ்பெக்டர் கடைக்காரரைப் பார்த்து கோபமாக முறைத்தார். ஜிப்பாக்காரர் மகிழ்ச்சி அடைந்து அந்த இடத்தை விட்டு அகலும் வரை முறைத்தார். பிறகு கடைக்காரரைப் பார்த்து, "யோவ் இப்படி எத்தனை போலிப் பெயருங்க வச்சிருக்கே?" என்றார். கடைக்காரர் பதறிப் போய் "அப்படியெல்லாம் கிடையாதுங்க லார் இந்த ஒண்ணு எப்படிய்ோ பிடிபட்...இல்ல தப்பா விட்டு. வேணுமுன்னா செக் பண்ணுங்க. " இன்ஸ்பெக்டர், மீண்டும் ரிஜிஸ்டரைப் புரட்டினார். "ஏய்யா, நல்லப்பா தெருவுல 148ஆம் நம்பர் நாகராஜனுக்குக் கார்டு இருக்கா?" "இருக்குங்க இது தப்புங்றதினாலே அது தப்பாயிடாது. போன வாரம், அவன் நாகராஜன் என் சொந்தக்காரன். ஆனால் குடிகாரப் பயல்