பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 குற்றம் பார்க்கில் இன்ஸ்பெக்டரின் உதடு கொதித்தது "யோவ், நான் குடிகாரனா? நான் உன் சொந்தக்காரனா?" "ஐயா என்ன சொல்றீங்க?" "நான்தாய்யா நாகராஜன் என்கிற செக்கிங் இன்ஸ்பெக்டர் எனக்குக் கார்டு இருக்கா? அதுவும் போனவாரம் உன் கடையில் வந்து அரிசி வாங்கினேனா? சொல்லுய்யா..." கடைக்காரர். இப்போது உண்மையிலேயே பயந்து, முழுப் பூசணிக்காயைச் சோற்றில் திணிக்கும் வேலையை விட்டு பரிதாபமாக இன்ஸ்பெக்டரைப் பார்த்தார். இருவரும் கடைக்குத் திரும்பினார்கள். கடைக்காரர் இப்போது ஸ்டூல் எடுத்துப் போடவில்லை. பக்கத்து வீட்டுக்குப் போய் ஒரு குஷன்' நாற்காலியைக் கொண்டு வந்து போட்டார் இன்ஸ்பெக்டரின் கோபம் அடங்கியதாகத் தெரியவில்லை பாழாப் போகிற உடுப்பிக்காரனும் அப்போது பார்த்து ஹோட்டலை மூடிவிட்டான். கடைக்காரர் பேச்சிைத் தொடங்கினார் "நான் பிள்ளை குட்டிக்காரன். ஐயா தான் மன்னிக்கணும் " "உன் லைசென்ஸை ரத்து பண்றேனா, இல்லையா பாரு." "ஐயா பெரிய மனசு பண்ணனும் கடை லைசென்ஸ் போயிட்டா... நான் பிச்சைதான் எடுக்கணும் " "உங்களை ல்லாம் சும்மா விடக் கூடாதய்யா." கடைக்காரர் நாகாஸ்திரத்தைப் பிரயோகித்தார் 'ஐயா வீட்ல இந்த நாப்பது கிலோ அரிசியையும் கொண்டு வந்து போடுறேன் எத்தனை மணிக்கு வரச் சொல்றீங்களோ, அத்தனை மணிக்கு வாறேன். சாயங்காலமுன்னா செளகரியம். அதுக்குள்ள சர்க்கரையும் வந்திடும் " செக்கிங் இன்ஸ்பெக்டர் யோசித்தார் பாவம் ஏழை அவன் வேட்டி கூட கிழிஞ்சி இருக்கு சட்டையில கூட பொத்தல் தலையில் எண்ணெயே இல்ல அலங்கோலமா இருக்கான் வீட்டுக்கு வரவழைச்சி புத்திமதி சொல்லலாம். ஒழிஞ்சி போறான் இன்ஸ்பெக்டர், கருணை உள்ளம் கொண்டவர்.