பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு-சமுத்திரம் 71 சரி சரி, என் பெயரையும். வீடே இல்லாத ஆசாமி பேரையும் அடிச்சிடு இந்தா என் பால் கார்டு; இதையும் ரினிவ்' பண்ணு (56ரூபாய்) இருட்டினதுக்கப்புறம் அரிசியோட வா. ஒழுங்காக இரு இல்ல. தொலைச்சிப் பிடுவேன் இன் ஸ்பெக்டர் போய்விட்டார். கடைக்காரரின் உடலை வெளியே காட்டும் ஆடைகள், 200 போலிப் பெயர்களால் 80 குவிண்டால் சர்க்கரையும், 150 குவிண்டால் அரிசியும் கிடைப்பதை ஊரின் கண்களுக்கு மறைக்கலாம். ஆனால் அவற்றை 'பிளாக்கில்' விற்று மாதா மாதம் சுமார் 4500 ரூபாய் வருமானம் வருவதை மறைக்கலாம் அந்தப் பணத்தினால், கடைக்காரருக்கு இரண்டு பெரிய வீடுகள் சென்னையில் இருப்பதையும், கிராமத்தில் இரண்டு கோட்டை” நிலம் இருப்பதையும் மறைக்கலாம். இது கூடப் பரவாயில்லை. இந்த எத்தர்கள் ஏழ்மைக் கோலம் போட்டு, ஏழைகளுக்குக் களங்கம் விளைவிப்பதைத் தான் அந்த ஆடைகள் மறைக்கவில்லை. குட்டி மஸ்தானின் நியாய லீலைக் கடை' நன்றாகவே நடக்கிறது. விவில் சப்ளைக் கார்ப்பரேஷனின் செக்கிங் ,இன்ஸ்பெக்டரின் சோதனையால் பொதுச் சொத்துக்கும் பலன் கிடைத்தது. கடைக்காரரின் 200 போலிக் கார்டுகளில் இப்போது இரண்டு குறைந்து விட்டன