பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா குட்டாம்பட்டியில், வடக்குத் தெருவும். தெற்குத் தெருவும் அல்லோலகல்லோலப்பட்டன மற்றத் தெருக்கள் அல்லோல கல்லோலப்படவில்லை ஏனென்றால், அந்த ஊரில் வேறு தெருக்கள் கிடையாது. வடக்குத் தெரு மாடசாமியின் மகனும் கல்லூரி வரைக்கும் காலெடுத்து வைத்த பிள்ளையாண்டானுமாகிய சண்முகத்திற்கும், தெற்குத் தெரு, சுடலையாண்டி மகளும், டிச்சரம்மாவுமான அமுதாவுக்கும் திருமணம் நடக்கப் போவது ஊர் வாய்க்கு அவலாக வந்தது. - சண்முகமும், அமுதாவும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டார்கள். அவர்கள் இரவில் சந்திக்கும்போது அதை அருகிலிருந்த முருங்கை மரத்தில் ஏறி, மறைவாக இருந்து ரசித்த சில மைனர்களுக்கு இது 'திரில் லாக இல்லைதான். ஆனால், அந்த மைனர்கள் சொல்வதைக் கேட்ட ரசிகப் பெருமக்கள் 'முருங்கை மரத்தில் ஏறும் பாக்கியம்தான் கிடைக்கவில்லை திருமணத்தைப் பார்க்கும் பாக்கியமாவது கிடைக்கிறதே' என்று மகிழ்ச்சியடைந்தார்கள். "என் உழவு மாடுங்ககூட இவ்வளவு பொருத்தமில்ல. இந்தப் பய பிள்ளைக அவ்வளவு பொருத்தமாய் இருக்கு" என்று ஓர் ஆசாமி சொல்லும் அள்விற்கு அமுதாவும், சண்முகமும் கனப் பொருத்தமாக இருந்தார்கள் ஆனால், பெற்றோர்கள், உறவினர்கள் o நிச்சய தாம்பூலத்திற்குக் குறிக்கப்பட்ட நாளும் வந்தது. காலையில் இருந்தே ஆண் பெண் வீட்டுப் பங்காளிகள், கடைக்குப் போய் வெற்றிலை வாங்குவதும், வாங்கிய வெற்றிலை நன்றாக இல்லை என்று திருப்பிக் கொடுப்பதும், கருப்புக் கட்டி வாங்குவதும், அதை காபியாக்கிக் குடிப்பதுமாக இருந்தார்கள். அந்த ஊர் வழக்கப்படி மாப்பிள்ளை வீட்டுப் பங்காளிகள், பெண் வீட்டிற்குத் திரண்டு சென்று திருமணத்திற்குரிய நாளையும், நகை, ரொக்க r