பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு சமுத்திரம் 73 விவரங்களையும் முடிவு செய்யவேண்டும். மாப்பிள்ளை வீட்டில் சுமார் ஐம்பது பங்காளிகள் கூடி அண்டாவில் கொதித்துக் கொண்டிருந்த காபியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் "வந்து. காபி குடிக்கலாம். ராகு காலம் வர்றதுக்கு முன்னாடி போயிடணும்" என்றார் ஒரு நடுத்தர ஆசாமி "ராகு வந்தா வரட்டும் அது முடியற வரைக்கும் காபி குடிக்கலாம்" என்றார் வயிறு காய்ந்த ஆசாமி ஒருவர் சண்முகத்திற்கு இருப்புக் கொள்ளவில்லை. "நிச்சயத் தாம்பூலம் எதற்கு? பேசாமல் இன்றைக்கே கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம்" என்று முணுமுணுத்தான். "ஏலே, மடப் பய மவனே எவன் கடையிலடா பாக்கு வங்கின? பாக்காடா இது?" என்றார் பல்போன தாத்தா ஒருவர் ஒரு வழியாக மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டை நோக்கி நடை போட்டார்கள் "ஏல, சண்முகம் நீ வரக் கூடாதுடா" என்று அவர்களோடு வந்த மாப்பிள்ளையைத் துரத்திவிட்டு, துள்ளு நடை போட்டது கூட்டம். பெண்ணைப் பெற்றவரும், அவரது பங்காளிகளும் வாசலிலேயே வந்து நின்றார்கள். "என்னவே மச்சான் எப்போ புது வீடு கட்டப் போநீர்? இந்த வீட்டை இடிச்சித் தள்ளிட்டு, புதுசா கட்டும்" என்றார் மாப்பிள்ளையின் பெரிய தாத்தா மகன். "இழவு எடுத்த பய பிள்ளை, அபசகுனமாய்ப் பேசறான் பார்" என்று சுப மங்கலமாக ச் சொன்னார் கிழவர் ஒருவர். மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குள் நுழைந்து, அங்கு ஏற்கனவே விரித்திருந்த ஒலைப் பாயில் உட்கார்ந்து இருந்து, பெண் வீட்டுப் பங்காளிகளோடு சங்கமமாகி, லாரி விபத்தில் இறந்த முனுசாமியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். & இதற்குள் பெண் வீட்டுப் பேர்வழி ஒருவர். ஒருசிறு துண்டுக் கருப்புக் கட்டியை ஒவ்வொருவருக்கும் கொடுத்துக் கொண்டு போக, அவர் பின்னால் வந்த ஒருவர் தலைக்கு ஒரு டம்ளர் தண்ணிரைக் கொடுத்தார். அது தான் காபி. "என்னவே, கருப்பட்டியை வச்சுக்கிட்டு. ஆளுக்கு ரெண்டு வாழைப்பழமும், சீனியும் வைக்கிறதை விட்டுப்புட்டு..." என்றார் மாப்பிள்ளை வீட்டார் ஒருவர்.