பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 குற்றம்-பார்க்கில் "வே மச்சான் இதுகூடக் கிடைக்காம நீர் திண்டாடுனது எனக்குத் தெரியாதா?" என்று பழைய குப்பையை ஒருவர் கிளற, கூட்டத்தினர் கை தட்டிச் சிரித்தார்கள். 'வந்த வேலையைப் பார்க்கிறதை விட்டுப்புட்டு மடப்பய மவனுக மட்ட ரகமா பேசறாங்க பாரு" என்று அறுபதைத் தாண்டிய ஐயாசாமி சொல்லிக் கொண்டே சம்பந்தி ஆகப் போகிறவர்களை அழைத்தார். "டேய், மாடா நீ கொஞ்சம் குறைச்சி கேக்கனும் என்னடா கடலை நீ கொஞ்சம் கூட்டிக் கொடுக்கணும்" என்றார் ஐயாசாமி. "மச் சானும் நானும் முன்னாடியே முடிவு கட்டியாச்சி. அவர் சொன்னபடி முப்பது கழஞ்சி நகையும், மூவாயிரம் ரூவாயும் கொடுத்தால் போதும்" என்றார் சண்முகத்தின் தந்தை மாடசாமி. "எங்க குடும்பத்தில் பொண்ணு எடுக்க நீங்க தவம் இருக்கனும்: நகை எதுக்காம்?" என்றார் வக்கில்லாத வாயாடி ஒருவர் மாப்பிள்ளை வீட்டார்க்கு ரோஷம் வந்தது. "ஏது ஏது, நாங்களா தவம் இருக்கனும்? ஏதோ பய சண்முகம் விரும்புறானேன்னு உங்க வீட்டுக்கு வந்தோம்." "காடிப் பானைக்குள் காலை விட்டிருப்பியளோ? பேச்ச்ைப் பார். பேச்சை. எங்க அமுதா விரும்புறாளேன்னு உங்களை வீட்டுக்குள் விட்டோம்" என்றார் பெண்ணின் பெரியப்பா. ஐயாசாமி துள்ளிக் குதித்தார். "சல்லிப் பயல்களா சல்லித் தனமா பேசாதிங்கடா சுடலையாண்டி தாம்பாளத்தில் கொஞ்சம் வெத்திலை பாக்கும், வாழைப்பழமும், ரூவாயும் வச்சி கொண்டு வா வர்ற வெள்ளிக்கிழமை ராத்திரி பதினோரு நாழிகையில் தாலி கட்டணும்" என்றார். உடனே கடலையாண்டி, தயாராக வைத்திருந்த தாம்பாளத்தை நீட்டினார். சாளரத்தின் வழியாக, நடப்பது அனைத்தையும் நாணத்தோடு கவனித்துக் கொண்டிருந்த அமுதா, பூரிப்பால் பெளர்ணமியானாள் அந்தச் சமயம் பார்த்து மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த கல்லூரிப் பையன் ஒருவன், "ஒரு சின்ன விஷயம், எங்க பெரியப்பா மகன் கல்யாணத்துக்கு, வேளாண்மைக் கட்சித் தலைவர் வெற்றித் திரு. வெண்தாமரையார் தலைமை தாங்கனும்" என்றான் "அந்தத் தோலிருக்க களை விழுங்கும் வெண்தாமரை