பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 75 வேண்டாம். நல்லார் கட்சித் தலைவர் 'நயமிகு நாராயணன் தான் தலைமை தாங்கணும்" என்று பெண் வீட்டைச் சேர்ந்த பி.யூ.சி. ஃபெயிலான ஒருவன் சொன்னான் "யாரு, நாராயணனா? அவன் அகப்பட்டதைச் சுருட்டும் அயோக்கியனாச்சே? அவன் வந்தால் கல்யாணம் நடக்காது, கருமாதி தான் நடக்கும்." "எங்க தலைவரை, அப்படி மட்டமாய்ப் பேசாதே மச்சான். உங்க வெண்தாமரை தான் அயோக்கியன்." "நாராயணன் வந்தால் அவன் காலை ஒடிச்சி, கையில் கொடுப்போம்." "வெண்தாமரை வராம கல்யாணம் இல்லை." "நாராயணன் தலைமை ஏறாமல் தாலி, கழுத்தில் ஏறாது." பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் (சம்பந்திகளாகப் போகிறவர்கள் தவிர) வெண்தாமரையாகவும், நாராயணனாகவும் மாறினார்கள். விஷயம் கெளரவப் பிரச்சினையாகியது ஐயாசாமி எம்பிக் குதித்தார் பெண்ணின் அப்பாவும், பிள்ளையின் அப்பாவும் கையைப் பிசைந்தார்கள். இப்போது அவர்களால், தத்தம் பங்காளிகளின் பேச்சுக்கு மறுவார்த்தை சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால், பங்காளிக் கூட்டம் 'பாய் காட்' செய்து விடும் "தலைமை கிலைமை எதுவும் வேண்டாம் எவனையும் கூப்பிட வேண்டாம்" என்றார் ஐயாசாமி. 鬱 "முடியாது. 'வெற்றித்திரு. வெண்தாமரை வரணும்." "அந்த முடிச்சி மாறி வந்தால், கழுத்தில் முடிச்சி விழாது. நாராயணன் வந்தே ஆகணும்." ஐயாசாமி சிந்தித்தார்: "இதுக்கு நான் ஒரு ഖഴ്സി கண்டு பிடிச்சிட்டேன். நான் சொல்றதைக் கேளுங்க" என்றார். "சீக்கிரமா சொல்லுங்க மாமா நாராயணன்தான் தலைமை தாங்கணும்." "வெண்தாமரை வரணும்னு சொல்லுங்க."