பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 குற்றம் பார்க்கில் ஐயாசாமி நிதானமாகச் சொன்னார். "பேசாம நானே தலைமை தாங்குகிறேன். கூட்டத்தினர் சிரித்தார்கள். "தலைமை தாங்குறவர் ஒரு மணி நேரமாவது பேசனும். உங்களால் முடியுமா தாத்தா" என்றான் ஃபெயிலான பி.யூ.சி. ஐயாசாமி, "ஒரு மணி நேரம் என்ன, அதுக்கு மேலே வேணுமுன்னாலும் பேசுவேன்" என்றார். "நீங்க பேசுவீங்க யார் கேட்கிறது? எங்க தலைவர் வெண்தாமரை, பேசினால், மாப்பிள்ளை தாலி கட்டக் கூட மறந்து போவான்." "கூடாது. கூடவே கூடாது. வெண்தாமரையும் ஆமையும் ஒன்னு. போற இடம் உருப்படாது. ஒருக்காலும் நடக்காது. அந்தச் சோமாறி வந்தால் கல்யாணம் நடக்காது, கருமாதிதான் நடக்கும்." ஐயாசாமி மேடைப் பேச்சாளியானார். "மடப்பய மவங்களா, சொல்றதைக் கேளுங்க. அழிஞ்சி போகாதீங்க. நம்ம கிராமத்தில் கட்சிங்க வந்த பிறகு ஊரு ஊரா இல்லை. அதுவும் பஞ்சாயத்துத் தேர்தல் இழவுக்குப் பிறகு ஒரே இழவாப் போச்சி. எங்கயோ இருக்கிற பயல்களுக்காக நாம் ஏண்டா சள்டை போடணும்? அவங்க ஒருவனோட ஒருவன் கூடிக்கிறான். நம்ம பசங்க இழவு வீட்டுல கூட கலந்துக்க மாட்டேங்கறான். இது என்ன அரசியலுடா? நாம ஒன்னோட ஒண்ணு: சின்னஞ் சிறிசுக, அந்த ரெண்டும் நூறாண்டுப் பயிருடா, ஒண்ணை ஒண்னு விரும்பது, அழிச்சிடாதீங்க அழிஞ்சி போவீங்கடா. சுடலையாண்டி, தாம்பாளத்தைக் கொண்டு வா!" "முடியாது. முடியாது, நாராயணன் வரிம கல்யாணம் நடக்கப் போறதில்லை." "வெண்தாமரை வராம, கல்யாணத்தை நடத்த விடப் போறதில்லை." "முடியாது. வெண்தாமரை அயோக்கியன்: போக்கிரி: பொறுக்கி." "வே, மச்சான் என்னைத் திட்டும்; ஆனால் எங்க தலைவரைத் திட்டினா, பல்லு உடைஞ்சு போயிடும்." "எங்கே, உடைடா பார்க்கலாம்."