பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க-சமுத்திரம் 77 "உடைச்சா என்னடா பண்ணுவே?" இரு தரப்பும், கைகலக்க முற்பட்டன. உள்ளே இருந்த பெண் பிள்ளைகள் வெளியே வந்து ஒப்பாரி வைத்தார்கள். அமுதா, செய்வதறியாது சண்முகத்தை நினைத்தாள். ஊரே கூடியது. சத்தம் கேட்டு, சன்முகமும் அங்கே வந்தான். பழைய ஜாதிகள் மறைந்து கொண்டிருக்கையில் புதிய ஜாதிகள் அரசியல் ஆடையில் உலவத் தொடங்கின. இப்போது, ஐயாசாமி அடிதடியில் அகப்படாமல் தப்பிப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை. செய்ய முடிந்ததைச் செய்தார். "வாடா சண்முகம் இந்த ரெளடிப் பயல்க வீட்டில் ஒண்னும் வேண்டாம்." "நீ உள்ளே போம்மா இந்த ரெளடிப் பயல்க வீட்டில் சம்பந்தம் வேணாம்." இரு தரப்பும் ஒருவாறு கலைந்து, வெளியேறிற்று. அமுதாவும், சண்முகமும் அழுது கொண்டே பிரிந்தார்கள். திருமணம் நின்றுபோன வெறுப்பில் சண்முகம் ராணுவத்தில் சேர்ந்து, காஷ்மீருக்குப் போய்விட்டான். அவன் பிரிவில், அமுதா அரையுருவானாள். இரு தரப்பினரும் தங்கள் தன்மானத்தைத் தலைவர்களோடு ஐக்கியப்படுத்தி, தீராப் பகை கொண்டனர். உறவு. பகையாக மாறிய ஒரு மாதத்திற்குள் எல்லாப் பத்திரிகைகளும் ஒரு செய்தியைக் கொட்டை எழுத்தில் வெளியிட்டன. செய்தி இதுதான். வேளாண்மைக் கட்சித் தலைவர் வெண்தாமரை மகனுக்கும், நல்லார் கட்சித் தலைவர் நாராயணன் மகளுக்கும் சென்னையில் திருமணம் தலைவர்கள் வாழ்த்து