பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பழத்தோட்டம் ஒரு கிராமப் பஞ்சாயத்துக்குத் தனியாக அலுவலகம் இல்லையானால், அந்தப் பஞ்சாயத்துத் தலைவரின் வீடு அலுவலகமாகக் கருதப்பட வேண்டும் என்று. சட்டம் சொல்கிறது. அந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவமோ, ஒர் ஊரில் பஞ்சாயத்து அலுவலகம் இருந்தால், அது தலைவரின் வீடாகக் கருதப்பட வேண்டும் என்று, சட்டத்தைத் தாமாகவே திருத்தி, அமுல் செய்பவர். அப்படிப்பட்டவருக்கு எதிராக அந்தக் கிராமத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடப்பதில் வியப்பில்லை. அவர், அந்த ஆர்ப்பாட்டங்களை அநாவசியமாகச் சமாளிப்பதிலும் வியப்பில்லை. அவரை எதிர்ப்பவர்களுக்கும், அவரிடம் ஒரு பயம் கலந்த மரியாதை உண்டு. சிலர், அவரை "பலே கில்லேடி" என்று பாராட்டுவதும் உண்டு. கொள்ளைக்கார ஜம்புலிங்கத்திற்கும் சாம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரர்களுக்கும், மக்கள் மத்தியில் இருக்குமே ஒரு மரியாதை, அந்த மரியாதை பரமசிவத்திற்கும், பஞ்சாயத்துச் சொத்து மாதிரி, நன்றாகக் கிடைத்தது. பரமசிவத்திற்கு எதிராக, பஞ்சாயத்து அலுவலகத்திற்குச் சற்றுத் தொலைவில் உள்ள கிராமக் கச்சேரியில் ஒழிக கோஷங்கள் ஒலித்தன. கோஷங்களைச் செவி மடுக்கக் கூட்டம் கூடி வழிந்தது. ஒடு. ஒடு: ஊரைவிட்டு ஒடு! Eఫ3) , &ధ)ప): பஞ்சாயத்தைக் கலை நடத்து நடத்து, நீதி விசாரணை நடத்து பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம்)