பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 79 ஒழிக ஒழிக’ ஊர்ப் பொதுமக்களில் பெரும்பகுதியினர், எதிர்க் கட்சித் தலைவர் ஏகாம்பரம் (முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர்) தலைமையில், கோஷங்களை, கோஷ்டிக் களமாக்கிக் கொண்டிருக்கையில், பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி சிவகுமார், கணக்குகளைத் தணிக்கை செய்வதற்காக, அந்தத் திருவூரில் காலடி வைத்தான். காதில் எட்டி உதைப்பது போல், சத்தம் கேட்டு, கூட்டத்தைத் திரும்பிப் பார்த்தான். அவனுக்கு இருபத்து மூன்று வயதிருக்கும். தமிழக சர்வீஸ் கமிஷனில் "குருப் டு" எழுதி, பதவிக்கு வந்தவன் அவன் வயதுக்கேற்ற துணிச்சலில் (அல்லது மடத்தனத்தில்) சிவகுமார், கூட்டத்திற்குள் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் கூட்டத்தில் நிசப்தம். அவன் உடனடியாக பஞ்சாயத்துத் தலைவரை டிஸ்மிஸ் செய்யப்போவது போல் கூட்டத்தில் ஒரு பிரமை கூட்டம், மெளனத்தின் மூலம் கொடுத்த மரியாதையில் சிவகுமார் பெருமிதமடைந்தான். நெடிய அந்த மெளனத்தை, ஒரு பியூஸி பெயிலன் கலைத்தான். "பஞ்சாயத்து ஆபீஸர் சார் ஊராட்சி மன்றத்திற்கு எதற்காகத் தையல் மிஷின்கள் கொடுக்கிறாங்க?" , சிவகுமார், ஒரு (இன்றைய) அதிகாரிக்குரிய பாணியில் பதிலளித்தான்: "ஏழைப் பெண்கள் மிஷின்களில் தையல் கற்றுப் பிழைப்பதற்காக, இந்தத் திட்டம்." பெயிலன் விடவில்லை. "பஞ்சாயத்துத் தலைவர் வீட்டில் தான் மிஷின்கள் இருக்கணுமுன்னும், அதில, அவரு பிள்ளைங்கதான் தைக்கனுமுன்னும் ஏதும் சட்டம் இருக்கா லார்?" சிவகுமார், இந்தக் கேள்விகளுக்கு மெளனத்தைப் பதிலாக்கினான். பியூலியாரின் வழியில், இன்னொரு ஆசாமி நடை போட்டார். அவருக்குப் பஞ்சாயத்துத் தலைவர் வீட்டு வரியை அதிகமாகப் போட்டிருந்தார். "ஆபீஸர் லாரே பஞ்சாயத்தில் இருந்து ஸ்கூலுக்கு, ஒரு பிள்ளைத்கு நாலு பைசா வீதம் கொடுக்கிறாங்களே. எதுக்கு?" "அரசு ஆறு பைசாவம், பஞ்சாயத்து நாலு பைசாவுமாகப்