பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ł. குற்றம் பார்க்கில் போட்டு, ஆக, பத்து பைசாவில், ஒவ்வொரு பிள்ளைக்கும் நடுப்பகல் உணவு கொடுக்க வேண்டுமென்ற உயர்ந்த லட்சியமே காரணம்" என்றான் சிவகுமார், "அப்படியா சங்கதி பஞ்சாயத்துத் தலைவரும். ஹெட்மாஸ்டரும் பங்கு போட்டு ஹோட்டலில் சாப்பிடலாமுன்னு சட்டம் சொல்றதா நான் நினைச்சேன்" சிவகுமார் மெளனியானான். இப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஏகாம்பரம் துள்ளிக் குதித்தார், "இ.ஒ. பி. ஐயா கிணறு வெட்றதுக்காக, சர்க்கார்ல விவசாயி ஒவ்வொருவருக்கும் ஐயாயிரம் ரூபாய் லோன் கொடுக்கி றாங்களாமே; ஏன் கொடுக்கிறாங்க?" "இது என்னங்க கேள்வி நிலத்தில் நீர்பாய்ச்சி, உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற அரசின் நோக்கமே, அடிப்படைக் காரணம்" என்றான் சிவகுமார் ஏகாம்பரம் இரண்டு தடவை சிரித்துவிட்டு, "இந்த ஊர் லே பத்துப் பேரு கிணறு வெட்ட லோன் வாங்கினாங்க அதில ஐந்து பேருக்குச் சொத்தே கிடையாது: இரண்டு பேர் ஊரிலேயே இல்ல பத்தில் ஒருவன் கூட கிணறு கிடக்கட்டும். ஒரு குழி கூட வெட்டல. ஒரு வேளை, பஞ்சாயத்துத் தலைவரை, பைக்குள்ள போட்டா, ஒன்னும் வெட்ட வேண்டாமுன்னு சட்டம் சொல்லுதோ?" என்றார். 彎 "டேய் இப்படியே பேசிக்கிட்டுப் போனால், உன்னை வெட்டுவேண்டா" என்று ஒரு குரல் கேட்டது. பஞ்சாயத்துத் தலைவரின் ஆதரவாளர்கள், கூட்டத்திற்கு எதிர்ப்புறமாகத் திரண்டு வந்தார்கள். முன்னணியில் நின்று, கூட்டத்திற்குப் பின்னணி பாடியது, பஞ்சாயத்துத் தலைவரின் மச்சான் (காண்டிராக்டர்) ராமசாமி. எதிர்பாராத் இந்தப் 'பஞ்சாயத்துத் தலைவர் பாதுகாப்புப் படை'யின் தளபதி ராமசாமிக்கு, ஏகாம்பரம் பதிலளிக்கு முன்னால், படையின் துணைத் தளபதி கத்தினார், "யோவ் பரமசிவத்தைத் திட்டுற பரமயோக்யரே! நீயும்தான் தலைவராய் இருந்தே நீ என்னத்தைக் கிழிச்சே?" எதிர்க்கட்சி ஏகாம்பரம் என்ன கொக்கா? "நான் என்ன கிழிச்சேனோ, தெரியாது. ஆனால், என் மாமன் மச்சானுக்குக் காண்டிராக்ட் கொடுக்கல. என் பிள்ளிங்களை தையல் மிஷின்களில் தைக்க விடல."