பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 81 பதில் பேசப்போன தொண்டர்களை அடக்கிவிட்டு பஞ்சாயத்துத் தலைவர் மச் சான் பதிலளித்தார் "நீ மாமன் மச்சானுக்கு ஏய்யா கண்டிராக்ட் கொடுக்கிற? நீயே வேறு பேர் ல காண்டிராக்ட் எடுத்தியே மறந்துட்டியா? நீ தையல் மிஷின் கள்ள உன் பிள்ளிங்கள தைக்க விடலங்கறதும் வாஸ்தவம்தான். நீதான் அவ்வளவு மிஷினையும் வித்துப்பிட்டியே, பிறகு எப்படித் தைக்கிறது?" ராமசாமியின் பதிலுக்கு, அவரது தொண்டர்கள் கை தட்டினார்கள். உடனே எதிர்க் கட்சிக்காரர்கள் கல் தட்டினார்கள். திணவெடுத்த தோளினராய் இரு கோஷ்டிகளும் பகைப்புலம் நோக்கிப் பாயத் தொடங்கியதும் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி சிவகுமார் குறுக்கிட்டான். கல்லூரிப் பேச்சுப் போட்டிகளில் சிறப்புப் பரிசு (மூன்றாவது பரிசு) பெற்ற அவன் "அமைதி, அமைதி, வன்முறை வழியல்ல. கல்லடி நல்லடியாகாது பஞ்சாயத்துத் தலைவர் தவறு செய்திருந்தால் நான் நடவடிக்கை எடுக்கிறேன். பஞ்சாயத்தைக் கலைக்க (சிபார் சு) செய்கிறேன். ஆனால், தலைவர் தவறு செய்தாரா என்பதை நான்தான் கவனிக்கவேண்டும். நீங்களே நீதிபதிகளாகக் கூடாது. எதிர்க்கட்சி அணி, சிவகுமார் மனுநீதி வழங்குவான் என்று நம்பியதைப் போல், "நடத்து நடத்து நீதி விசாரணை நடத்து பஞ்சாயத்து அதிகாரி சிவகுமார் வாழ்க!" என்று சொல்லிக் கொண்டே நடந்து கலைந்தது, பஞ்சாயத்து (தலைவர்) மச் சான், சிவகுமாரை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு "யோவ் இ ஒ பி. நீ ஏய்யா இந்த அற்பப் பயல்ககிட்ட வந்தே? நீ பாட்டுக்கு பஞ்சாயத்துக்கு வந்தியா, கணக்கைப் பார்த்தியாண்னு போகாம உனக்கு ஏய்யா வீண் வேலை?" என்றார். சிவகுமாருக்கு ஏகப்பட்ட கோபம்: ராமசாமி நான் நீ என்று பேசுவதால், ஆத்திரமடைந்த அவன், பொறுமையை கடைப்பிடித்தான். (செல்லாக் கோபம் பொறுமை என்பது பழமொழி.) ராமசாமி எங்கே பல்லை உடைத்துவிடுவானோ என்று எண்ணி, பல்லைக் கடித்துக் கொண்டான். பஞ்சாயத்து அலுவலகத்தை நோக்கி நடந்தான். பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம், பாதிக் கண்களை மூடிய வண்ணம், ஒரு ஈஸிசேரில் மல்லாந்து கிடந்தார். பக்கத்தில் - 6 - آلا- 5)