பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 குற்றம் பார்க்கில் பார்ட் டைம் கிளார்க், விசிறியால் அவருக்கு வீசிக் கொண்டிருந்தான். அவரது பிள்ளைகள் அலுவலகத்தில் 'கண்ணாம் பூச்சி விளையாடிக் கொண்டிருந்தார்கள். உலகத்தில் எதுவுமே நடக்கவில்லை என்பது மாதிரி. பரமசிவம் ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். வளர்ச்சி அதிகாரி சிவகுமார் அலுவலகத்திற்குள் நுழைந்ததும், தலைவர் லேசாகச் சிரித்தார். அதுதான் வரவேற்பு. சிவகுமார், 'பிஸினஸ் லைக்காக' "நான் ஆடிட்டிக்கு வந்திருக்கேன்" என்றான். "தெரியும் நேற்று ஆர்.டி. ஒ. ஆபீஸில் உங்கள் டூர் புரோக்ராமைப் பார்த்தேன்," என்றார் பஞ்சாயத்து பரமசிவம். "நான் உங்களுக்கு லெட்டர் போட்டிருந்தேனே!" "நான் பார்க்கல...எங்கேயாவது வீசி எறிஞ்சிருப்பாங்க. பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம் அலட்சியமாகக் கூறினார். சிவகுமார் பேச்சை விரும்பாதவன்போல், "எல்லா ரிக்கார்ட்ஸும் ரெடியா? " என்றான். பரமசிவம் சாவதானமாக, "இன்னும் கர்னம் டிமான்ட் புக்கையே எழுதல; எப்படிக் கணக்கைப் பார்க்கப் போlங்க? வி.எம். ஊரிலேயே இல்ல; வரி வசூல் புக் அவருகிட்டதான் இருக்கு" என்றார். "நான் உங்களுக்கு முன்னாலேயே லெட்டர் போட்டது. இப்படி நேரக் கூடாது என்பதற்காகத்தான்." - இதற்குள் மச்சான்காரர் ராமசாமி குறுக்கிட்டு "யோவ், எங்க மாமா பஞ்சாய்த்துக்குன்னு உழைச்சி உழைச்சி ஒடாய்ப் போனவரய்யா. அவரைப் போலீஸ் விசாரிக்கிறது மாதிரி விசாரிக்கிறியே!" தலைவர், மச்சான் பேசுவதைத் தடுக்கவில்லை. அவன் அப்படிப் பேசுவது ஒரு சர்வசாதாரண நிகழ்ச்சி என்பது போல், முகத்தை ரப்பர் மாதிரி வைத்துக் கொண்டு "சிவகுமார்! உங்களுக்குப் புரோமோஷன் வரப் போவுதாமே? கலெக்டர் என்கிட்ட சொன்னார்" என்றார். "எனக்கு இன்னும் புரபேஷனே டெக்லேர் ஆகலியே வேலைக்கு வந்து முனு மாதங்கூட ஆகல: அதெப்படி வரும்?" என்றான் சிவகுமார்,