பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் - 83 "சாரி கலெக்டர் சொன்னது சிங்குமாரை: உன்னை... உங்களைப் பத்தியில்ல." சிவகுமார், கணக்கே கண்ணாயினான். "இப்போ, என்ன செய்யுறது? எப்படியும் ஆடிட் செய்தாகணுமே." "நான்தான் சொல்லிவிட்டேனே தம்பி. டிமாண்ட் புக் எழுதறவன் எவனோ ஐம்பது ரூபாய் கொடுத்தான்னு நிலம் அளக்கப் போயிட்டான். இன்னொரு நாளைக்குப் பார்த்துக் கிட்டாப் போச் ச . சிவகுமார் சிறிது யோசித்து விட்டு, "1966-67ஆம் ஆண்டுக் கணக்கைத் தானே பார்க்கப் போறேன்; அந்த ரிக்கார்டுங்கெல்லாம் இருக்கத்தானே செய்ய்ம் என்றான். துடித்துக் கொண்டு எழுந்த மச்சானைக் கண்களால் அடக்கிவிட்டு, "அந்த கேஷ்புக் எங்க இருக்கோ, தேடணும். உ.ம்...தம்பி நான் சொல்றதைக் கேளுங்க. நான் கொஞ்சம் பிலியாய் இருக்கேன். மினிஸ்டர் வராரு. ஒரு கூட்டம் நான் தலைமை தாங்கறேன். இன்னொரு நாளைக்கு வச்சிக்கலாம்." சிவகுமார் விடவில்லை "நீங்க வேணுமின்னா போங்க! உங்க கிளார்க் இருக்கார்ல, அவரை வச்சி முடிச்சிக்கிறேன்." பஞ்சாயத்துத் தலைவர், சிவகுமாரை மேலும் கீழும் பார்த்துவிட்டு, பார்ட்-டைம் கிளார்க்கை கீழும் மேலுமாகப் பார்த்தார். பிறகு "டேய், ஜம்பு நம்ம வீட்ல போயி கேஷ் புக்கைத் தேடி எடுத்தா. பசங்க எங்கேயாவது அவங்க நோட் புத்தகங்களுக்குள்ள வச்சிருப்பாங்க" என்றார். பார்ட்-டைம் கிளார்க், உடம்பெல்லாம் பார்ட்-பார்ட்டாக ஆட, பறந்தான். பஞ்சாயத்துத் தலைவர், "சரி சிவகுமார், நான் ஆர்.டி.ஓ. வைப் பார்த்துவிட்டு வந்துடுறேன். உங்களுக்கு உதவி செய்ய என் மச்சான்காரன் இருக்கான். எதையும் கேளுங்க, தயங்காம கொடுப்பான்" என்று சொல்லிவிட்டு வயிறு குலுங்க எழுந்தார். சிறிது யோசித்துவிட்டு, "என் கணக்குப் புக்கைப் பார்த்திங்கன்னா தெரியும் கிராமத்துக்கு எவ்வளவோ சேவை செய்திருக்கேன். சொந்த முறையில் கூட எவ்வளவோ சேவை செய்திருக்கேன் பெண் பிள்ளிங்க நெல்லை உரலில் போட்டுக் குத்தி கஷ்டப்படறாங்களேன்னு ஒரு ரைஸ் மில் வச்சேன் கிணறு வெட்டி விவசாயிங்க பிழைக்கட்டுமுன்னு வெடி மருந்துக் கடை வச்சேன். ஜனங்களுக்குக் கடன் கிடைக்கட்டுமுன்னு கோ-ஆப்ரேட்டிவ்