பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 குற்றம்-பார்க்கில் சொஸைட்டிக்கு தலிைவராய் ஆனேன் கிராமத்துக்காரங்க வீடு கட்ட கஷ்டப்படக் கூடாதுன்னு சிமென்ட் கோட்டா எடுத்தேன் இவ்வளவு சேவை செய்தும் சில நன்றி கெட்ட பயலுக இருக்காங்க " தன் சாதனைகளை அடுக் கடுக்காக எடுத்து வைத்தார், பஞ்சாயத்துத் தலைவர் "காய்ச்ச மரத்தில்தான் மாமா கல்லு விழும்" என்றான் மச்சான் ராமசாமி சிவகுமார் 'கல் மாதிரி பேசாமல் இருந்தான் தலைவர் பரமசிவம் நீண்ட பெருமூச்சை விட்டு விட்டு, "சரி, எனக்கு நேரமாயிட்டு டேய் ராமசாமி, சிவகுமாருக்குச் சாப்பாடு போடு" என்று பிச்சைக்காரனுக்குச் சோறு போடச் சொல்வது போல் சொல்லிவிட்டுக் கிளம்பினார் இதற்குள் பார்ட்-டைம் ஆசாமி தலைவர் வீட்டுக்குப் போகையில், தலைவரின் தலைவியான அவர் மனைவி, சில பழைய காகிதங்களைப் பேப்பர்காரனுக்குப் போட, விலை பேசிக் கொண்டிருந்தாள் அந்தக் குப்பைக்குள் படுகுப்பையாக இருந்த கேஷ் புக்கையும், டிமாண்ட் புக்கையும் கொண்டு வந்து சிவகுமாரிடம் நீட்டிவிட்டுப் பணிவாக நின்றான் வளர்ச்சி அதிகாரி, ஒவ்வொரு செலவையும் ரசீதையும் பார்த்தான் சம்மா சொல்லக் கூடாது கணக்கு கச்சிதமாக இருந்தது பார்ட் டைம் கிளார்க்கு பதினைந்து தபாய், நடுப் பகல் நிதி முப்பது ரூபாய், ரோடு போட்டது ஆயிரம் 3 ஆக பஞ்சாயத்துத்தான், தலைவருக்குக் கடன்காரனாக இருந்தது கையிலிருந்து மனிதர் செலவழித்திருக்கிறார் சிவகுமாருக்கே ஆச்சரியம். அத்தனை செலவுக்கும் ஸ்டாம்ப் போட்ட ரசீதுகள். ஒரே ஒருவிடத்தில் மட்டும் ஒரு கேள்வியைக் கேட்டான் "ஏம்பா, உழுவதற்குக் கூலி 20 ரூபாய்னு போட்டிருக்கு, எதுக்கு?" என்றான் " பழத்தோட்டத்துக்கு" என்று பார்ட்-டைம் பதில் சொல்லும் முன்னால், மச்சான்காரன் முந்திக் கொண்டான் மரஞ்செடி வாங்க ரூ 300. அவற்றை நடுவதற்கு ரூ.100. உரம் போட ரூ 200. மருந்து தெளிக்க ரூ. 50. வேலி போட ரூ 50 எல்லாவற்றுக்கும் ரசீதுகள்! அவன் பார்த்த பஞ்சாயத்துக்களில் இந்தப் பஞ்சாயத்தில் தான் கணக்கு கச்சிதமாக இருந்தது ஆனால், கேஷ் புக்கில் அவரு பசங்க படம் போட்டிருந்தாங்க பரவாயில்லை. கணக்குதான் சரியாக