பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு சமுத்திரம் 85 இருக்கே சிவகுமார் கேஷ்புக்கில் கையெழுத்துப் போட்டுவிட்டு எழுந்தபோது, பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம், "இந்த ஆர் டி ஒ சுத்த மோசம் மனுஷன் வீட்டுக்கு வாங்க, வீட்டுக்கு வாங்க ன்னு உயிரை எடுக்கிறார் அன்றைக்கு மினிஸ்டர் கெஸ்ட் ஹவுஸிலேயே தங்கிடு ன்னார் எனக்கென்ன வேற வேலை கிடையாதா?" என்று முனங்கிக் கொண்டே வந்தார் "கணக்கெல்லாம் கச்சிதம் லார், ஒரு சின்னத் தப்புக்கூடக் கிடையாது" என்றான் சிவகுமார் தலைவர் சிரித்துக் கொண்டார். மச்சானைப் பார்த்து, சோடா வாங்கிக் கொண்டு வரச்சொன்னார் "பிரஸிடெண்ட் லார், பழத்தோட்டம் போடுறதுக்குக் கூட கையில இருந்து பணம் செலவழிச்சிருக்கீங்களே சினிமா செஸ் வந்ததும் அதை எடுத்துக்கங்க" என்றான் சிவகுமார் மூட மக்கள், இவரைப் போய் கரெப்ட்' என்கிறார்களே! "பணம் என்ன தம்பி பணம், இன்னாரு இருந்தாரு, இவரு போட்ட பழத்தோட்டம் இது என்று செத்தபிறகு சொன்னால் போதும் ஏழை எளியவங்க நல்லா இருக்கனும், அவ்வளவுதான் அந்தப் பழத்தோட்டத்துல என் கையால ஒரு பழத்தைக் கூட இன்னும் எடுத்து ருசி பார்க்கல " "பிரஸிடென்ட் லார், அப்படியே ஒரு பொடி நடையா நடந்து பழத்தோட்டத்தைப் பார்த்துவிட்டு வந்திடலாமா?"என்றான் சிவகுமார் தலைவரின் கறுத்த முகம் சிவந்தது "நேரமாயிட்டு இன்னொரு நாளைக்குப் பார்க்கலாம் "இல்ல. பழத்தோட்டத்தைப் பார்த்துட்டு வந்தால் தேவல "உங்களுக்குப் பழம் வேணுமுன்னா என் வீட்ல இருக்கு, தர்றேன் " "அதுக்குக் கேட்கல இவ்வளவு பணம் செலவழிச்ச பஞ்சாயத்துப் பழத்தோட்டத்தைப் பார்க்காமப் போறது முறையில்ல " "அப்படின்னா நான் பழத்தோட்டம் போடவே இல்லை என்கிறீங்களா?" பஞ்சாயத்துத் தலைவர், பிறிதொரு அவதாரம் எடுத்தவர் போல் 'எங்க அப்பன் குதிருக்குள் இல்லை' என்கிற முறையில் பேசியதால், சிவகுமார் 'அப்படி ஏன் இருக்கக் கூடாது?’ என்று முதன் முதலாகச் சந்தேகப்பட்டான் இதற்குள் மச்சான்காரன்,